Published:Updated:

சிக்கிய அங்கொட லொக்கா கூட்டாளி! - மீண்டும் சூடுபிடிக்கும் இலங்கை நிழல் உலக தாதா வழக்கு

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கூட்டாளி பெங்களூரில் கைதுசெய்யப்பட்டார்.

இலங்கை நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா. கொலை, கொள்ளை, ரியல் எஸ்டேட் மாஃபியா என்று மோஸ்ட் வான்டட் குற்றவாளியாக வலம்வந்தவர். கழுகு மூலம் போதைப்பொருள் கடத்தும் வழக்கத்தைக்கொண்டவர். இலங்கையில் கேங்ஸ்டர் வாரில், போலீஸ் வாகனத்தில் சென்ற எதிரணியினர் ஏழு பேரைக் கொன்றுவிட்டு இந்தியா தப்பிவிட்டார்.

அங்கொட லொக்கா
அங்கொட லொக்கா
`இயற்கை மரணம் ஓ.கே... இறந்தது அங்கொட லொக்காதானா?' - இலங்கை தாதா மரண வழக்கு சர்ச்சை

சட்டவிரோதமாக இந்தியா வந்த லொக்காவுக்கு, வழக்கறிஞர்கள் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். பெங்களூரு, சென்னை, கோவை என்று அவர் சுற்றியிருக்கிறார்.

கோவையில் தன் காதலி அமானி தான்ஜியுடன் தங்கியிருந்தவர், கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, அமானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

சனுகா தனநாயக
சனுகா தனநாயக

இந்த நிலையில், பெங்களூரில் தலைமறைவாக இருந்த அங்கொட லொக்காவின் கூட்டாளி சனுகா தனநாயக என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்துள்ளனர். சனுகா பெங்களூரில் தங்கியிருப்பது தொடர்பாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து பெங்களூரு சென்ற போலீஸார், மக்களிடம் அவரது புகைப்படத்தைக் காண்பித்து சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். அதில் கிடைத்த தகவலில்தான் சனுகாவைக் கைதுசெய்துள்ளனர். அவருக்கு உதவியாக இருந்ததற்காக, தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கோபாலகிருஷ்ணன் என்பவரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

போதைப்பொருள்
போதைப்பொருள்

இந்த கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியாக இருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அதனால், அங்கொட லொக்காவின் நெட்வொர்க், சனுகா மூலம் தொடர்ந்து இயங்கியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அங்கொட லொக்கா உயிரிழப்பதற்கு முன்பு சில காலம் பெங்களூருவில் இருந்தார். அப்போது இருவரும் ஒன்றாக இருந்ததாகக் கூறப்படுகிறது. நன்னன் என்ற பெயரில் அங்கு தங்கியிருக்கிறார்.

பிஸ்டல்
பிஸ்டல்
சித்தரிக்கப்பட்ட படம்

அங்கொட லொக்கா தனது பிஸ்டல் ஒன்றை, சனுகாவிடம் கொடுத்துவைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சனுகா, கோபாலகிருஷ்ணனை கோவை அழைத்து வந்திருக்கும் போலீஸார், அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு