Published:Updated:

`கொரோனாவுக்கு மருந்து; 3 நாள்களில் குணம்!’- ஸ்ரீபெரும்புதூரில் கூவிக்கூவி விற்ற பீடா கடை இளைஞர்

கொரோனா வைரஸ் ஆய்வு
கொரோனா வைரஸ் ஆய்வு

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்குச் சரியான மருந்து இல்லை என்றாலும் கொரோனாவிற்கான மருந்து கண்டு கண்டுபிடிப்பதில் உலக நாடுகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொரோனா நோய்க்கு மருந்து எனக் கூறி மருந்துப் பொடி விற்பனை செய்த வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர்மீது ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து எச்சரித்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலகம் முழுவதிலும் சுமார் 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. பெருந்தொற்றான கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப் பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றன. அமெரிக்கா, ஸ்பெயின்,ஜெர்மனி, இத்தாலி எனப் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸை எதிர்ப்பதில் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் என்னும் மருந்து `கேம் சேஞ்சராக’ இருக்கும் எனக் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். ஆனாலும் அந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குச் சரியான மருந்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூர் மார்க்கெட்டில் கொரோனா மருந்து எனக் கூறி பொடி ஒன்றை இளைஞர் ஒருவர் விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மார்க்கெட் பகுதியில் இன்று காலை கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து இருப்பதாகவும், இந்த மருந்தை சிறப்பு விற்பனை செய்வதாகவும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திரஜித் மண்டல் என்ற இளைஞர் விற்றுவந்தார். பொடி செய்து விற்று வந்த அந்த மருந்தை அப்பகுதி வழியாகச் சென்ற இளைஞர்களிடம், `இந்த மருந்தைச் சாப்பிட்டால் நான்கு நாளில் கொரோனா குணமாகிவிடும்’ எனத் தெரிவித்திருக்கிறார். காய்ச்சல் இருமல் இருந்த சிலர் அந்த மருந்தை வாங்கிச் சென்றுள்ளனர்.

கைது
கைது

அப்போது அங்கிருந்த சிலர் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து அங்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், சுகாதாரத்துறையினரை வரவழைத்து அந்த மருந்து குறித்து விசாரணை நடத்தினர். பொடி செய்வதற்காக வைத்திருந்த மருந்துகளை வாங்கி சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவை காய்ச்சல் மற்றும் சளிக்குப் போடக்கூடிய சாதாரண மருந்து வகையைச் சேர்ந்தது என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இந்தர்ஜித், கடந்த 3 வருடமாக மாம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி அப்பகுதியில் பீடாகடை வைத்து நடத்தி வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்மீது வழக்குப் பதிவுசெய்து ஜாமீனில் காவல்துறையினர் ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு