Published:Updated:

ஊழியரை உதைத்த அதிகாரி... சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சர்ச்சை

எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பணியிலிருந்த காவலாளியை, கோயில் கணக்கர்‌ காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.

ஊழியரை உதைத்த அதிகாரி... சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சர்ச்சை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பணியிலிருந்த காவலாளியை, கோயில் கணக்கர்‌ காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.

Published:Updated:
எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சி

தமிழக அரசு முத்திரைச் சின்னமாகவும், 108 வைணவத் தலங்களில் மிக முக்கியத் தலமாகவும் கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டாள் கோயிலில் கோபுரவாசல் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக, செயல் அலுவலர் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.

எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சி
எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சி

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெருவில் வசித்துவரும் கர்ணன் என்பவர், ஆண்டாள் கோயிலில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக காவலாளியாகப் பணியாற்றிவருகிறார். காவலாளி கர்ணனுக்கு, செயல் அலுவலர் மற்றும் ஒருசில அதிகாரிகள் கடுமையான பணிச்சுமைத் தருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் கோயிலில் பணியில் இருக்கும் காவலாளி கர்ணனை, அலுவலகத்தின் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு சேரை எடுத்துச் செல்ல அதிகாரிகள்‌ பணிப்பதும், அப்போது அவரை கோயில் கணக்கர்‌ பின்னிருந்து காலால் எட்டி உதைப்பதுமான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவிவருகிறது.

கர்ணன்
கர்ணன்

உடல்நலக் குறைபாடுள்ள கர்ணனுக்கு, அதிகாரிகள் அளிக்கும் பணிச்சுமை மிகுந்த மனஉளச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு உடல்ரீதியான பிரச்னைகள் இருப்பதை செயல் அலுவலரிடம் தெரிவித்தும், வேண்டுமென்றே கர்ணனுக்கு இரவுப்பணி வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இதனால் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட கர்ணன் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்றுவருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், பணி நேரத்தில் வேலையாள்களை, அதிகாரிகள் கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும் பெரும்பாலான பணியாளர்கள் அதிகாரிகளுக்கு பயந்துகொண்டு இதை வெளியில் சொல்லாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செயல் அலுவலர், பணியாளர்கள் முன்னிலையில் கோயில் கணக்கர், காவலாளி கர்ணனை எட்டி உதைக்கும்போது கணக்கரைக் கண்டிக்காமல் மற்றவர்களும் அவரின் செயலை வேடிக்கை பார்ப்பதும், சிரிப்பதுமான செயல் கோயிலுக்குள்ளேயே தீண்டாமையை விதைப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ணன்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ணன்

இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் பெற கோயில் அலுவலகத்தைப் பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், யாரும் பதிலளித்துப் பேசவில்லை. அவர்கள் விளக்கம் தரும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பிறகு பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism