Published:Updated:

"உங்க மகள் மாதிரி நெனைச்சிக்கோங்க!" - அழைப்புகள் வழியாக ஆன்லைன் மோசடி

வலைவிரிக்கும் ஆன்லைன் கிளிகள்...
வலைவிரிக்கும் ஆன்லைன் கிளிகள்...

கருப்பையாவும், 'அவர்களது வங்கிக் கணக்கில் பணம் போடச் சொல்லாமல், நம் கணக்கில்தானே போடச் சொல்கிறார்கள்' என்று நம்பிக்கையுடன் அவரது வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தியிருக்கிறார்.

சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த கருப்பையா. கடும் பணம் நெருக்கடியிலிருந்தவர் லோன் தொடர்பாக சில ஃபைனான்ஸ் நிறுவனங்களின் சைட்களை ஆன்லைனில் பார்த்திருக்கிறார்.

அப்போதுதான் அவரது அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. அவரிடம் பேசிய பெண் ஒருவர், "நீங்க பணத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறதா தெரியுது. கவலைப்படாதீங்க, உங்க கஷ்டம் ஒரே நாளில் தீர்ந்துடும்" என்று ஆறுதலாகப் பேசியவர், இரண்டு லட்சம் ரூபாய் லோன் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்.

மேலும், குடும்ப விவரங்களைக் கேட்டு ஆறுதல் சொன்ன அந்தப் பெண், "உங்க மகள் மாதிரி நெனைச்சிக்கோங்க... லோன் வேணும்னா உங்க கணக்கில் ஓரளவுக்காவது பணம் இருக்கணும். அப்பதான் நம்பி லோன் கொடுப்பாங்க. ஒரு 20,000 ரூபாயைப் புரட்டி வங்கிக் கணக்குல போடுங்க" என்று கூறியிருக்கிறார்.

கருப்பையாவும், 'அவர்களது வங்கிக் கணக்கில் பணம் போடச் சொல்லாமல், நம் கணக்கில்தானே போடச் சொல்கிறார்கள்' என்று நம்பிக்கையுடன் அவரது வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தியிருக்கிறார்.

"உங்க மகள் மாதிரி நெனைச்சிக்கோங்க!" - அழைப்புகள் வழியாக ஆன்லைன் மோசடி

சில நிமிடங்களில் மீண்டும் தொடர்புகொண்ட அந்தப் பெண், அவரது ஆதார் கார்டு விவரங்கள், வங்கி டெபிட் கார்டு அட்டை விவரங்களுடன், நைஸாகப் பேசி 'பின்' நம்பரையும் வாங்கியிருக்கிறார்.

தொடர்ந்து, "உங்களுக்கு லோன் ஓகே ஆகிவிட்டது... வாழ்த்துகள் சார்" என்று தொடர்பைத் துண்டித்தார். மகிழ்ச்சியுடன் தனது வங்கிக் கணக்கை சரிபார்ப்பதற்குள் கருப்பையாவுக்கு வந்தது 'ஜீரோ பேலன்ஸ்' மெசேஜ். அதிர்ச்சியடைந்த கருப்பையா, மீண்டும் அந்தப் பெண்ணின் செல்போனைத் தொடர்புகொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டிருந்ததை அறிந்த கருப்பையா, சென்னை சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்தார்.

- நுனி நாக்கு ஆங்கிலத்திலோ அல்லது தெள்ளத் தெளிவான தமிழிலோ... இளம்பெண்கள் சிலர் கிளிப்பிள்ளைபோல சொன்னதையே திரும்பத் திரும்ப உங்களிடம் சொல்லியிருப்பார்கள்.

இப்படி ஆசை வலைவிரிக்கும் அழைப்புகள் அத்தனையும் உங்களிடம் கறக்க நினைக்கும் தகவல்கள் இவைதான்... வங்கிக் கணக்கு விவரங்கள், ஏ.டி.எம் ரகசிய பின் நம்பர் மற்றும் ஆதார் விவரங்கள். இவற்றைக் கொடுத்து விட்டீர்களென்றால் எப்போது வேண்டு மானாலும் உங்கள் கணக்கிலிருந்த பணம் மொத்தமாக வழித்தெடுக்கப்பட்டு... கிளிகள் பறந்துவிடும். பழைய டெக்னிக்தான்... ஆனால், ஏமாற்றுபவர்கள் புதிது புதிதாக... தினுசு தினுசாக ஏமாற்றுகிறார்கள்.

> ஒரு 'பிரியாணி' ரூ.40,000! - புதுரக ஆன்லைன் மோசடி

> 'சின்ன மீன்' குமரேசன்!

> 'சுறாமீன்' ஜே.எஸ்.ஆர்!

- இந்த மூன்று சம்பவங்களுடன் கூடிய முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/36HdHOm > "ஹலோ சார்... நீங்க ரொம்ப லக்கி!" - வலைவிரிக்கும் ஆன்லைன் கிளிகள்... https://bit.ly/36HdHOm

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு