Published:Updated:

படம் பார்... பறிகொடு...' - ஆன்லைன் பாலியல் தொழில் அதிர்ச்சிகள்!

ஆன்லைன் பாலியல்
ஆன்லைன் பாலியல்

பாலியல் தொழில் தொடர்பாக, கடந்த ஆறு மாதங்களில் சென்னையில் மட்டும் 120 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆன்லைன் பாலியல் தொழில் தொடர்பாக மட்டுமே 80 வழக்குகள்

ஊரடங்கில் தொழில்கள் பலவும் முடங்கிவிட்டன; பொருளாதாரம் படுத்து விட்டது; வாழ்வாதாரங்கள் எப்போது வலுப்பெறுமென்று யாருக்கும் தெரியாது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தக் கொடூர காலத்தில், ஆன்லைனில் கொடிகட்டிப் பறக்கிறது பாலியல் தொழில்.

நெட்டைத் தட்டினால் ஏகப்பட்ட லிங்க்குகளில் கசிகின்றன கசாமுசா விவகாரங்கள். வயது, நிறம், மாநிலம், குடும்பப் பெண்கள், திருமணமானவர், திருமணம் ஆகாதவர் என தகவல்களையும் நிர்வாண உடல்களையும் திரையில் கொண்டுவந்து கொட்டுகிறது ஆன்லைன்! கையடக்க போனில் திறக்கும் ரகசியப் பாதைகளில், திரும்பிய பக்கமெல்லாம் சிவப்பு விளக்குப் பகுதிகள்!

கோடிகள் புரளும் ஆன்லைன் பாலியல் வர்த்தகத்தில் பண மோசடிகளெல்லாம் சகஜம். `ஃபிஃப்டி ஃபிஃப்டி சக்சஸ் ரேட்' என்கிறார்கள். இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, 'இவரின் அந்தரங்கப் படங்கள் வேண்டுமா? ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள்...', 'இந்தப் பெண்ணுடன் வீடியோ காலில் செக்ஸியாகப் பேச வேண்டுமா? இரண்டாயிரம் அனுப்புங்கள்...' என்கிறார்கள்.

வீடியோ காலில் இளம்பெண் ஒருவர் 'முழுமையாக'த் தோன்றி, வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப அவர் சொல்கிறபடி சில்மிஷங்களை அரங்கேற்றுவார். இதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை விலை பேசுகிறார்கள். இரண்டு பெண்கள் திரைக்கு வர வேண்டுமென்றால் அப்படியே தொகை ரெட்டிப்பாகும். பல நேரங்களில் தொகையும் திரும்பாது; காட்சியும் கிடைக்காது. அந்த எண்ணைத் தொடர்புகொண்டால் 'பீப்' சவுண்ட் மட்டுமே வரும்.

அதேசமயம், வாடிக்கையாளரின் அலைபேசி எண்ணைவைத்து அவரது ஃபேஸ்புக் கணக்கை அலசி ஆராய்ந்துவிடுகிறார்கள். ஆளைப் பொறுத்து, அவர்களது ஸ்டேட்டஸைப் பொறுத்து வேறு ஒரு நம்பரில் வந்து மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். `கடந்த முறை வாட்ஸ்அப்பில் எங்களுடன் நீங்கள் செய்த மொத்த 'சாட்'-ஐயும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவைத்திருக்கிறோம். பணம் கொடுக்காவிட்டால், ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவோம்' என்று மிரட்டுகிறார்கள். சமீபத்தில், சென்னை கல்லூரி இளைஞர் ஒருவரை இப்படி மிரட்டியே இரண்டு லட்சம் ரூபாயைக் கறந்திருக்கிறது ஒரு கும்பல். இந்த விவகாரத்தில் ஏராளமானோர் ஏமாந்திருந்தாலும், கெளரவம் கருதி போலீஸில் புகார் கொடுப்பதில்லை.

படம் பார்... பறிகொடு...' - ஆன்லைன் பாலியல் தொழில் அதிர்ச்சிகள்!

பாலியல் தொழில் தடுப்பு காவல் துறையினர் நம்மிடம் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். "பாலியல் தொழில் தொடர்பாக, கடந்த ஆறு மாதங்களில் சென்னையில் மட்டும் 120 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆன்லைன் பாலியல் தொழில் தொடர்பாக மட்டுமே 80 வழக்குகள். ஆன்லைனில் தரப்படும் அலைபேசி எண்களில் பேசுபவர்கள் தமிழகத்தில் இருப்பதில்லை. வட மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிவது எளிதல்ல.

நீங்கள் குறிப்பிடும் பன்னாட்டு வெப்சைட், இந்தியாவின் முக்கியமான நட்பு நாட்டிலிருந்து செயல்படுகிறது. நாங்கள் ஏற்கெனவே அந்த வெப்சைட்டை முடக்குவதற்குப் பரிந்துரை செய்தும் எதுவும் நடக்கவில்லை. அதைத் தடைசெய்ய மத்திய அரசு யோசிக்கிறது" என்றார்கள்.

ஆடம்பர வாழ்க்கையின்மீதான ஆசையில் வருபவர்கள், அவர்களின் உடலைச் சுரண்டிக் கொழுக்க நினைத்து இங்கு வருபவர்கள் பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், வறுமையின் காரணமாக, அதுவும் இந்த கொரோனா காலத்தின் கொடுமை காரணமாக பாலியல் தொழிலுக்குள் வரும் அப்பாவிப் பெண்களை நினைத்தால் நெஞ்சு பதறுகிறது!

> சக்கைபோடு போடும் சல்லாப 'ஆப்'கள் / ஆண்களின் அதிகாலை 'மூட்' சூடேற்றும் 'குட்மார்னிங்' அப்டேட் / 'சுகர் அங்கிள்ஸ்' எனும் சுகவாசிகள் / அரேபிய மஜா... நடிகையின் புது ரூட் / கூட்டுக்குடும்ப செட்அப்... குரூப் செக்ஸ் பிசினஸ் / ஜாமீன் கையெழுத்துக்கு ஆளில்லை...

- முழுமையான கவர்ஸ்டோரியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/31twrhd > சல்லாப சாம்ராஜ்யம்! - ஆன்லைன் அநாகரிகம்! https://bit.ly/31twrhd

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு