Published:Updated:

விழுப்புரம்: தவற்றைக் கண்டித்த தலைமை ஆசிரியரை கஞ்சா போதையில் தாக்கினாரா பள்ளி மாணவர்?- என்ன நடந்தது?

விழுப்புரம்

அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், தவற்றைக் கண்டித்த தலைமை ஆசிரியரை கஞ்சா போதையில் தாக்கி படுகாயமடையச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம்: தவற்றைக் கண்டித்த தலைமை ஆசிரியரை கஞ்சா போதையில் தாக்கினாரா பள்ளி மாணவர்?- என்ன நடந்தது?

அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், தவற்றைக் கண்டித்த தலைமை ஆசிரியரை கஞ்சா போதையில் தாக்கி படுகாயமடையச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்றுவருகின்றனர்.

இந்தப் பள்ளியில் கடந்த ஓராண்டாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக பள்ளி மாணவர்கள் சிலர் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதையும், ஒழுங்கீனமாகச் செயல்படுவதையும் கண்டறிந்திருக்கிறார். அதன் பிறகு, மாணவர்களின் பெற்றோர்கள், ஒன்றிய சேர்மன், போலீஸாரின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள்களுக்கு அடிமையான மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

விழுப்புரம்
விழுப்புரம்

அதன்படி, தனியார் மருத்துவமனை ஒன்றில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையான மேல்நிலை வகுப்பு  மாணவர்கள் சுமார் 10 பேர் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், போதைப் பழக்கத்துக்கான சிகிச்சையில் இருந்துவந்த அந்த மாணவர்கள் மீண்டுவந்த நிலையில்... கஞ்சா வியாபாரிகள் சிலர், அவர்களை மூளைச்சலவை செய்து மீண்டும் கஞ்சாவை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதே அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர், பள்ளி வளாகத்தின் அருகிலுள்ள புதர் ஒன்றில் கஞ்சா போதையில் கிடந்து மீட்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் வழக்கம்போல் பள்ளி செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, மாணவி ஒருவரை 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இது குறித்து, அந்த மாணவி தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்த தலைமை ஆசிரியர், அந்த மாணவரைக் கண்டித்து, அறிவுரை கூறி அனுப்பிவைத்திருக்கிறார். பின்னர் நேற்று மாலை கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த மாணவரை சக மாணவர்கள் மூன்று பேர் தலைமையாசிரியரிடம் அழைத்துச் சென்றனர்.

கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனை
சித்திரிப்புப் படம்

அப்போது, தலைமை ஆசிரியரைத் தரக்குறைவாகப் பேசிய அந்த மாணவர், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான பொருளைக்கொண்டு தலைமை ஆசிரியரை திடீரென தாக்கிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். இதில், தலைமை ஆசிரியருக்கு தலையின் இடது பக்கமாக பலத்த காயம்  ஏற்பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. உடனே, அவரை சக ஆசிரியர்கள் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் மாணவனால் தாக்கப்பட்டதும், அவன் போதையில் இருந்ததும் உண்மைதான். ஆனால், அந்த மாணவன் கஞ்சா போதையில் இருந்தானா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இருப்பினும், நாங்கள் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

தவற்றைக் கண்டித்து, அறிவுரை கூறிய தலைமை ஆசிரியரை பள்ளி மாணவரே தாக்கி காயமடையச் செய்திருக்கும் சம்பவம், விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.