Published:Updated:

அரியலூர்: பள்ளி மாணவன் தலையில் கல்லைப்போட்டு கொடூரக் கொலை - சக மாணவனைப் பிடித்து போலீஸ் விசாரணை

அரியலூர்

``சிசிடிவி காட்சியில் அந்த மாணவன் ஐந்தாறு முறை வந்து போகிறான். அந்த மாணவனைப் பிடித்திருக்கிறோம்.” - போலீஸார்

அரியலூர்: பள்ளி மாணவன் தலையில் கல்லைப்போட்டு கொடூரக் கொலை - சக மாணவனைப் பிடித்து போலீஸ் விசாரணை

``சிசிடிவி காட்சியில் அந்த மாணவன் ஐந்தாறு முறை வந்து போகிறான். அந்த மாணவனைப் பிடித்திருக்கிறோம்.” - போலீஸார்

Published:Updated:
அரியலூர்

11-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸாரின் விசாரணை நீள்கிறது.

அரியலூர்
அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தாய் இறந்த நிலையில், தந்தை வேறு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில், பக்கத்தில் உள்ள தனது தாய்வழிப் பாட்டி பாப்பாத்தி பராமரிப்பில் வளர்ந்துள்ளார். மணிகண்டனுடைய சகோதரர் முருகன் அமிர்தராயன் கோட்டை கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் வசித்துவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மணிகண்டன் அரியலூரில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்‌ சனி, ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு பொற்பதிந்த நல்லூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். இரண்டு நாள்களாகப் பாட்டி வீட்டில் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டில் வந்து படுத்துக்கொள்வது வழக்கம்.

உயிரிழந்த மணிகண்டன்
உயிரிழந்த மணிகண்டன்

திங்கள்கிழமை தேர்வுக்குச் செல்லவேண்டியிருந்ததால் ஞாயிறு பாட்டி வீட்டில் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டில் வந்து படுத்துத் தூங்கியுள்ளார். மணிகண்டன் வெகுநேரமாக எழுந்து வராததால் பக்கத்தில் உள்ள பாட்டி வந்து பேரனை எழுப்பி பள்ளிக்கு அனுப்புவதற்காக வந்து பார்த்தபோது தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இரவு வீட்டில் தனியாகத் தூங்கியபோது மாணவன் தலையில் யாரோ மர்ம நபர்கள் பாறாங்கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தா.பழூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வநது விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ”மணிகண்டன் அரியலூரில் ஹாஸ்டலில் தங்கி படித்துவந்தான். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சிலர் பாலியல்ரீதியிலான உறவில் இருப்பதாக ஹாஸ்டல் வார்டனிடம் சொல்லியிருக்கிறான். அதில் கோபமடைந்த ஓர் இளைஞன் கொலை செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. சிசிடிவி காட்சியில் அந்தப் பையன் ஐந்தாறு முறை வந்து போகிறான். அந்த மாணவனைப் பிடித்திருக்கிறோம். விசாரணை முடிந்ததும் உங்களிடம் பேசுகிறோம்" என்று போனைத் துண்டித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism