Published:Updated:

கோவை: நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த மாணவி தற்கொலை! - போலீஸ் விசாரணை

தற்கொலை

கோவையில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்துவந்த மாணவி ஒருவர், தூக்கு மாட்டி, தற்கொலை செய்துகொண்டார்.

கோவை: நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த மாணவி தற்கொலை! - போலீஸ் விசாரணை

கோவையில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்துவந்த மாணவி ஒருவர், தூக்கு மாட்டி, தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
தற்கொலை

கோவை கொண்டயம் பாளையம் பகுதியில், தனியார் நீட் தேர்வு பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. ஹாஸ்டல் வசதி கொண்ட இந்த பயிற்சி மையத்தில், செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் தங்கிப் படித்துவந்தார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், நேற்று உடல்நிலை சரியில்லை என்று சொல்லி மாணவி வகுப்புக்குச் செல்லவில்லை. அதையடுத்து, மாலை அவருடன் படிக்கும் சக மாணவிகள் அறைக்கு வந்தபோது, அவர் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிர்ச்சியடைந்தவர்கள் இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. மாணவி தங்கிப் படித்துவந்த அந்தப் பயிற்சி மையத்தில், மதுரையைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவரும் படித்துவந்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி
தற்கொலை செய்துகொண்ட மாணவி

அப்போது அந்த மாணவிக்கும் மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் பெற்றோர் கண்டித்துள்ளனர். மாணவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால், மாணவன் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, அவரை மதுரைக்கே அழைத்துச் சென்றுவிட்டனர். பயிற்சி மையத்திலும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு ஓரிரு முறைதான் வீட்டுக்குச் செல்ல முடியுமாம்.

தற்கொலை
தற்கொலை

இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த மாணவி, நேற்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீஸ் விசராணை நடத்தப்பட்டுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism