Published:Updated:

`தினமும் அடிதான்; என் சாவுக்கு ஆசிரியர்கள்தான் காரணம்' - அதிர்ச்சியளிக்கும் மாணவனின் வீடியோக்கள்

தற்கொலை

சென்னை பாடியில் பள்ளி மாணவன், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். அவன் தற்கொலை செய்வதற்கு முன்பு இறப்புக்கான காரணம் குறித்து வீடியோவில் பேசியிருக்கிறான். அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.

`தினமும் அடிதான்; என் சாவுக்கு ஆசிரியர்கள்தான் காரணம்' - அதிர்ச்சியளிக்கும் மாணவனின் வீடியோக்கள்

சென்னை பாடியில் பள்ளி மாணவன், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். அவன் தற்கொலை செய்வதற்கு முன்பு இறப்புக்கான காரணம் குறித்து வீடியோவில் பேசியிருக்கிறான். அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, குமரன் நகர், மகாத்மா காந்தி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (46). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரின் மகன்கள் பாரதிராஜா, பாரதி செல்வா (14). இளைய மகன் பாரதி செல்வா, அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தான். வழக்கம்போல கடந்த 22-8.2022-ம் தேதி சேகரும் அவரின் மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டனர். மூத்த மகன், பாரதி ராஜா கல்லூரிக்குச் சென்றுவிட்டார். பாரதி செல்வாவும் பள்ளிக்குச் சென்றிருக்கிறான்.

பாரதி செல்வா
பாரதி செல்வா

மாலையில் கல்லூரி முடிந்து மூத்த மகன் பாரதி ராஜா வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது வீடு உள்பக்கமாகப் பூட்டியிருந்திருக்கிறது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பாரதி செல்வா, வீட்டுக்குள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாரதிராஜா கதறி அழுதார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். பின்னர் கொரட்டூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பாரதி செல்வாவின் சடலத்தை மீட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்னை காரணமாக பாரதி செல்வா தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் மாணவன் பாரதி செல்வா பயன்படுத்திய செல்போனை அவனின் குடும்பத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது அதில் சில வீடியோக்கள் இருந்தன. அந்த வீடியோவில், `என்னைப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தினமும் அடித்து கொடுமைபடுத்திவருகின்றனர். அதனால் நான் மனஉளைச்சலில் இருந்தேன். கையை அறுத்துக்கொண்டு சாகப்போகிறேன்.

தற்கொலை
தற்கொலை

இந்த உலகத்தை எனக்குப் பிடிக்கவில்லை. என் சாவுக்கு என்னுடைய குடும்பத்தினர் காரணம் இல்லை. முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம்” என்று பேசியிருக்கிறான். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாரதி செல்வாவின் குடும்பத்தினர், வீடியோக்களை கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தும்படி தெரிவித்தனர். இதையடுத்து மாணவன் படித்த பள்ளியில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையடுத்து மாணவன் பேசிய இன்னொரு வீடியோவில், ``என்னை சென்னையில் புதைக்கவும் எரிக்கவும் வேண்டாம். நகரிக்குக் கொண்டு சென்று அங்குதான் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்” எனக் கண்ணீர்மல்க பேசியிருக்கிறான். அடுத்த வீடியோவில் மாணவன் தூக்கு மாட்டிக்கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மாணவனின் வீடியோ அடிப்படையில் விசாரணை நடந்துவருவதாக போலீஸார் தெரிவித்தனர்.