Published:Updated:

பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த பெண் காவலரின் மகள் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

தற்கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்துவரும் பெண் காவலரின் மகளான ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி, தற்கொலை செய்துகொண்டார்.

பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த பெண் காவலரின் மகள் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்துவரும் பெண் காவலரின் மகளான ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி, தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
தற்கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்துவருபவர் கலைவாணி. இவர், புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார். கலைவாணியின் மகள், முகப்பேர் பகுதியிலுள்ள பிரபல தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த சில தினங்களாக மாணவி, பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துவந்திருக்கிறார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

இந்த நிலையில் 10.8.2022-ம் தேதி வழக்கம்போல கலைவாணி வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்திருக்கிறார். கலைவாணியின் சகோதரர் குணசேகரன் அன்றைய தினம் மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது வீடு உள்பக்கமாகப் பூட்டியிருந்திருக்கிறது. கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. அதனால் கலைவாணிக்கு போன் செய்து விவரத்தை குணசேகரன் கூறியிருக்கிறார். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது துப்பட்டாவால் தூக்குப்போட்டுக்கொண்டு வீட்டின் ஹாலில் மாணவி தொங்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மாணவியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவியின் அம்மா கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தது தெரியவந்தது. அதனால்தான் அவர் பள்ளிக்குச் செல்லாமல் விடுமுறையில் இருந்திருக்கிறார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

வயிற்றுவலி காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இருப்பினும் மாணவியின் மரணம் தொடர்பாக போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பெண் காவலர் கலைவாணி, கடந்த சில ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து மகளுடன் தனியாக காவலர் குடியிருப்பில் வசித்துவருகிறார். கலைவாணியின் மகள், வயிற்றுவலிக்கு சிகிச்சை எடுத்துவந்திருக்கிறார். இந்தச் சமயத்தில் கலைவாணியின் மகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அதனால் மாணவியின் தோழிகளிடமும் கலைவாணியிடமும் விசாரணை நடத்தியிருக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு மரணம் தொடர்பாகக் கூடுதல் தகவல் கிடைக்கலாம்" என்றனர்.