Published:Updated:

``நான் பாஸ் பண்ணலைனா நீங்க கஷ்டப்படுவீங்க!" - நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி

தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், தேர்வு சில நாள்களே இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார்.

``நான் பாஸ் பண்ணலைனா நீங்க கஷ்டப்படுவீங்க!" - நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி

நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், தேர்வு சில நாள்களே இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம், வ.கீரனூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன்-உமா ராணி தம்பதியரின் மகள் நிஷாந்தி. மருத்துவராகும் கனவோடு படித்து வந்த இவர், கடந்தாண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் 600-க்கு 529 மதிப்பெண்கள் பெற்று பாஸ் செய்திருந்தார்.

நீட்
நீட்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவதற்காக அந்த ஆண்டே அதற்கான நீட் தேர்வு எழுதிய நிஷாந்தி, அதில் தேர்ச்சி பெறாத நிலையில், ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து இந்த ஆண்டும் நீட் தேர்வெழுதத் தயாராகி வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிறு (17.7.2022) அன்று நீட் தேர்வு நடக்கவிருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வழக்கம் போலத் தன் குடும்பத்தினருடன் இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் சென்றிருக்கிறார் நிஷாந்தி.

தற்கொலை
தற்கொலை

பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை அவரின் தம்பி இயற்கை உபாதையைக் கழிக்க எழுந்தபோது, வீட்டின் சமையலறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகத் தொங்கிய தன் அக்காவைக்கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதிருக்கிறார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் நிஷாந்தியின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, நிஷாந்தி எழுதிய தற்கொலைக் கடிதமும் சிக்கியது.

‘பிளஸ் டூ முடிச்சிட்டு, நல்ல கோர்ஸ் எடுத்து வேலைக்குப் போகப் பாரு. பைக்ல ஸ்பீடா போகாதே’ என தன் தம்பிக்குத் தனியாக அட்வைஸ் செய்திருந்தார்.
தம்பிக்கு எழுதிய கடிதம்
நிஷாந்தி எழுதிய கடைசி கடிதம்
நிஷாந்தி எழுதிய கடைசி கடிதம்

அப்பா, அம்மாவுக்குத் தனியாகவும், தம்பிக்குத் தனியாகவும் ‘தங்கிலீஸில்’ (தமிழைப் போலவே ஆங்கிலத்தில்) எழுதிய அந்த 4 பக்க கடிதத்தில், ``நீட் எக்ஸாம் கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேனு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. ஆனா, எங்கே பாஸ் பண்ணாம போயிடுவேனோன்னு இப்போ ஒரே பயமா இருக்கு. பாஸ் பண்ணலைனா நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்படுவீங்க.

அதை என்னால பார்க்க முடியாது. அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுக்கிறேன்..." என உருக்கமாக எழுதியிருந்த நிஷாந்தி, ``பிளஸ் டூ முடிச்சிட்டு, நல்ல கோர்ஸ் எடுத்து வேலைக்குப் போகப் பாரு. பைக்ல ஸ்பீடா போகாதே" என தன் தம்பிக்குத் தனியாக அட்வைஸ் செய்திருந்தார்.

நிஷாந்தி எழுதிய கடைசி கடிதம்
நிஷாந்தி எழுதிய கடைசி கடிதம்

இப்படி, நீட் தேர்வுக்கு இரு தினங்களே இருந்த நிலையில் நடந்த நிஷாந்தியின் இந்த தற்கொலையானது, நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

``நா டாக்டருனு சொல்லிக்கிட்டு, ஹெட் போனை ஸ்டெத்தஸ்கோப் மாதிரி காதுல மாட்டிக்கிட்டு அப்பப்போ விளையாட்டா என் நெஞ்சுல வெச்சு செக் பண்ணுவாளே..,

நிஷாந்தியின் தாயார் உமாராணி
நிஷாந்தியின் தாயார் உமாராணி

இப்போ அவளோட இதயத்துடிப்பே நின்னு போச்சே.., கடவுளே, இந்த நீட் இல்லையின்னா போன வருஷமே எம்மவ ஆசைப்பட்ட மாதிரி டாக்டர் ஆகியிருப்பாளே.. ஆனாலும், `கெடைச்சத படிம்மா...' அப்படீன்னுதானே நாங்க சொன்னோம்.

இப்போ பிணமா கெடக்காளே... 12 வருசம் ஃபர்ஸ்ர்ட் ரேங்க் எடுத்தவ என்னோட மவ... நீட்'னு கொண்டுவந்து இப்படி படிச்சா பிள்ளைகள பாடையிலே ஏத்துறியலே... சாமியே, இதுக்கு ஒரு முடிவே கெடையாதா...” என நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதது காண்போரைக் கண்கலங்க வைத்தது.

மாணவி தற்கொலை விவகாரத்தைக் கையிலெடுத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் வி.சி.க-வின் மண்டல அமைப்புச் செயலாளர் கிட்டுவிடம் பேசினோம். ``நீட் தேர்வின் காரணமாக அனிதாவில் தொடங்கி நிஷாந்தி வரை அரியலூர், பெரம்பலூரில் மட்டும் இதுவரை 4 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் நீட் தற்கொலை எண்ணிக்கை 18-ஐ தொட்டிருக்கிறது.

அஞ்சலி
அஞ்சலி

நீட்டுக்கு முன்பு வரை பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவம் பயில அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அங்கங்கே சேர்க்கப்பட்டு வந்தனர். தவிர, மாநில மருத்துவக்கல்லூரிகளில் 15 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்கு சி.பி.எஸ்.சி முறையில் அகில இந்தியத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அப்போதெல்லாம் எந்தப் பிரச்னையும் எழவில்லை.

இந்த நிலையில், கடந்த 2010-ல் காங்கிரஸ் பயன்படுத்திய நீட் என்ற வார்த்தைக்கு 2016-ல் செயல்வடிவம் கொடுத்தது பி.ஜே.பி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ‘ஆட்சியைக் கைப்பற்றினால் நீட் தேர்வை ரத்து செய்வோம்’ என தி.மு.க-வும் வாக்குறுதி அளித்தது.

எத்தனை பேர் செத்துப்போனாலும் எங்களுக்குக் கவலை இல்லை கார்பரேட், தனியார் முதலாளிகள் நல்லா இருக்கவேண்டும் என்பதற்காகவே நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது பா.ஜ.க
வி.சி.க-வின் மண்டல அமைப்புச் செயலாளர் கிட்டு
வி.சி.க.வின் மண்டல அமைப்புச் செயலாளர்  கிட்டு
வி.சி.க.வின் மண்டல அமைப்புச் செயலாளர் கிட்டு

அதன் அடிப்படையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி அதற்கான சட்ட முன் வரைவானது தமிழ்நாடு ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்குமா கிடைக்காதா..? கிடைக்கும் என்றால், அது எப்போது? என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகளாகவே இருக்கின்றன.

தற்போது, மத்திய பட்டியலில் இருக்கும் மருத்துவக் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதே இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும் என்றாலும், இதுவரை தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் விவரங்களைப் பார்க்கும்போது, அவர்களின் மன உளைச்சலுக்கு முக்கியமான காரணம் நீட் தேர்வு மதிப்பெண்கள்தான் என்பதை அறிய முடிகிறது.

போராட்டம்
போராட்டம்

உதாரணத்துக்கு, 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில், குறைந்தது 300 மதிப்பெண்கள் எடுத்திருந்தால்கூட அவர்களுக்கு ஏதாவது ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவர்கள் கேட்கும் லட்சங்களையும், கோடியையும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களால் கொடுக்க முடியாது.

இதுதான் அவர்களுக்கு அதிக மன உளைச்சலைத் தரும் விஷயம். எனவே, மதிப்பெண்களுக்கு ஏற்ப தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக்கட்டண விவரத்தை வெளிப்படையாக்கி, ஏழை மாணவர்களும் அதைச் செலுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வங்கிக் கடனுக்கு ஏற்பாடுசெய்து கொடுப்பது மட்டுமே இப்போதைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

கடிதம்
கடிதம்

எத்தனை பேர் செத்துப்போனாலும் எங்களுக்குக் கவலை இல்லை கார்பரேட், தனியார் முதலாளிகள் நல்லா இருக்கவேண்டும் என்பதற்காகவே நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது பா.ஜ.க" என்றார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் இது குறித்துப் பேசினோம். ``மிகவும் வருந்தத்தக்கச் செய்தி. தற்கொலை முடிவு எதற்கும் தீர்வாகாது... இதனை மாணவ, மாணவிகள் கருத்தில் கொள்ள வேண்டும். நீட் குறித்து தலைவரிடம் கலந்தாலோசித்து அதனைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.