Published:Updated:

நீலகிரி: நீட் தேர்வில் தோல்வி... விஷம் குடித்து மாணவி தற்கொலை!

பெண் தற்கொலை
News
பெண் தற்கொலை

நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத மன உளைச்சலில் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், ஓவேலி பாரதி நகரைச் சேர்ந்த அருளானந்தம் - புஷ்பா தம்பதியின் மகள் ஜெயா. 18 வயதான இவர் கடந்த 17 -ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது விஷம் அருந்திய நிலையில் உயிருக்கு போராடி வந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஜெயாவை மீட்டு உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவி ஜெயா
மாணவி ஜெயா

ஜெயாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்கொலைக்கு முன் அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டள்ளது. அந்த கடிதத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத மன உளைச்சலில் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாணவி ஜெயா தற்கொலை குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``சிறு வயதிலிருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்த மாணவி ஜெயா, கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம்‌ வகுப்பை முடித்திருக்கிறார். 486 மதிப்பெண் பெற்ற இவர், நீட் தேர்வுக்கான கோச்சிங்கிற்கும் சென்று நீட் தேர்வை எழுதியுள்ளார். கடந்த மாதம் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் தோல்வி அடைந்திருக்கிறார். விரக்தியில் இருந்த மாணவி ஜெயாவை திருப்பூரில் உள்ள அவரின் சகோதரி வீட்டுக்கு பெற்றோர் அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவி ஜெயா
மாணவி ஜெயா

அங்கு சில வாரங்கள் இருந்த ஜெயா, தனது பெற்றோரை பார்த்துவிட்டு வருவதாக கூறி பாரதி நகருக்கு வந்திருக்கிறார். கடந்த 17-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார். `நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் என்னால நிம்மதியாக வாழ முடியல. மன்னிச்சுடு அம்மா. தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன். அம்மா என்னை மீண்டும் மன்னித்துவிடு’ என ஜெயா எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.