Published:Updated:

மேஜையைத் தூக்கி ஆசிரியைமீது வீச பாய்ந்த மாணவர்... குமரி அரசு உதவிப் பெறும் பள்ளியில் அதிர்ச்சி!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியில் அமைந்துள்ள ஒரு அரசு உதவிப் பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கப் பாய்ந்து, பின்னால் நின்று நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வேலூரில் அரசுப் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரை அடிக்க பாய்ந்து, சுற்றி வந்து கலாட்ட செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்... கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியில் அமைந்துள்ள ஒரு அரசு உதவிப் பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கப் பாய்ந்து, பின்னால் நின்று நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் சுவர் ஓரமாக நிற்கும் ஆசிரியைமீது மேஜையைத் தூக்கி வீசுவதற்கு மாணவன் ஒருவன் செல்கின்றான். அதை கையால் தடுக்கிறார் அந்த ஆசிரியை. அதேபோல, வகுப்பறைக்கு வெளியே நிற்கும் மாணவன் ஆசிரியையின் பின்னால் நடனமாடுகிறான். மேலும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆசிரியையின் பின்னால் நின்று மாணவன் ஒருவன் நடனம் ஆடுவதுடன், மேஜைமீது ஏறி குதிக்கிறான். இந்த வீடியோக்களை குத்துப்பாடல் பின்னணியைச் சேர்த்து சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர்.

மேஜையைத் தூக்கி ஆசிரியைமீது வீச பாய்ந்த மாணவர்... குமரி அரசு உதவிப் பெறும் பள்ளியில் அதிர்ச்சி!

இதுகுறித்து விசாரித்தபோது, பள்ளியாடியில் உள்ள அரசு உதவிப்பெறும் மேனிலைப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை 11-ம் வகுப்பில் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மாணவன் ஒருவன், தரையிலும் மேஜைமீதும் நடனம் ஆடி, மேஜையைத் தூக்கி ஆசிரியைமீது வீச முயன்றிருக்கிறான். அதைக் கண்ட அந்த ஆசிரியை, தடுத்துவிட்டு அந்த மாணவனை எச்சரித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவரை அரசு பள்ளி மாணவர்கள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் வலம் வந்தன. ஆனால், சமீபகாலமாக இத்தகைய அச்சமூட்டும் செயல்களை பள்ளிகளில் மாணவர்கள் அரங்கேற்றி வருவது அனைவரையும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தி வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீஸாரும், குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரியும் நேற்று பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism