Published:Updated:

குமரி: `நிர்வாணமாக வீடியோ காலில் வா..!’ -மாணவியை மிரட்டி வன்கொடுமை; ராணுவ வீரர்களைத் தேடும் போலீஸ்

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டுவரும் ராணுவ வீரர் சஜித்
News
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டுவரும் ராணுவ வீரர் சஜித்

மூன்று மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்த சஜித், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாததை உறுதிசெய்துவிட்டு நள்ளிரவில் அங்கு சென்று அவரை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் பி.காம் படித்துவருகிறார். அந்த மாணவி ஒரு வழிபாட்டுத்தலத்தில் சிறுசேமிப்புத் திட்டத்தில் பணம் கலெக்‌ஷன் செய்யும் சேவையைச் செய்துவந்திருக்கிறார். சிறு சேமிப்புப் பணத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கடன் பெறுவதும், சில நாள்களில் திருப்பிக் கொடுப்பதும் வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்த நிலையில், சிறுசேமிப்பு முடிவடைந்த நிலையில் கடன்பெற்ற சிலருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க காலதாமதம் ஆகியிருக்கிறது. இதையடுத்து உறவினர் முறையான மேல்பாலையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவரிடம் 50,000 ரூபாய் கடன் கேட்டிருக்கிறார் சிறுமி.

அதற்கு ஜான் பிரிட்டோ, `நீ உனது தோழிக்கு அவசரத் தேவை எனக் கூறி உன் அக்காவிடமிருந்து ஐந்து பவுன் தங்க நகை வாங்கிக்கொண்டு வா. அதை நான் முன் தேதியிட்டு கூட்டுறவு வங்கியில் விவசாய நகைக்கடனாக அடகுவைத்து ஒருலட்சம் ரூபாய் வாங்கலாம். அதில் 50,000 ரூபாயை உனக்குத் தருகிறேன். 50,000 ரூபாயை நான் எடுத்துக்கொள்கிறேன். தமிழக அரசு உடனடியாகத் தங்கநகைக் கடனைத் தள்ளுபடி செய்யும். அப்போது நகையை எடுத்து உன் அக்காவுக்குக் கொடுத்துவிடலாம். இதன் மூலம் உனது கடனும் அடையும், நகையும் கிடைக்கும்' எனக் கூறியிருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட ஜான் பிரிட்டோ
கைதுசெய்யப்பட்ட ஜான் பிரிட்டோ

இதை நம்பி அக்காவிடமிருந்து ஐந்து பவுன் நகையை வாங்கி ஜான் பிரிட்டோவிடம் கொடுத்திருக்கிறார் மாணவி. நகையை வாங்கிய பிறகு பணம் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார் ஜான் பிரிட்டோ. பணம் இல்லாமல் இருந்தால் நகையையாவது திருப்பித் தா என மாணவி கேட்டிருக்கிறார். அதற்கு ஜான் பிரிட்டோ, `ராணுவத்திலிருக்கும் எனது நண்பர் சஜித் என்பவரிடம் உனது பணப் பிரச்னையை சொல்லியிருக்கிறேன். உன் செல் நம்பரையும் கொடுத்திருக்கிறேன், அவரிடம் பேசு' எனக் கூறியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து ராணுவ வீரரான சஜித் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் அந்த மாணவியிடம் பேசியிருக்கிறார். முதலில் `அண்ணனைப்போல நினைத்துப் பேசு, உனக்கு உதவுகிறேன்’ எனத் தூண்டில் போட்டிருக்கிறார் சஜித். பின்னர், `நீ உன் அக்காவிடம் இருந்து ஐந்து பவுன் நகை வாங்கியதை அக்காவின் கணவரிடம் சொல்லிக் குடும்பத்தைப் பிரித்துவிடுவேன். அதன் பிறகு உங்கள் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். நான் இது பற்றிச் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் வீடியோ காலில் நிர்வாணமாக என்னிடம் பேச வேண்டும்’ என சஜித் மிரட்டியிருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட லிபின் ஜாண்
கைதுசெய்யப்பட்ட லிபின் ஜாண்

மிரட்டலுக்கு பயந்து மாணவி இரண்டு முறை நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதாகத் தெரிகிறது. அந்த வீடியோவை பதிவுசெய்து வைத்த சஜித், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாகக் கூறி மாணவியை மிரட்டியிருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்த சஜித், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாததை உறுதிசெய்துவிட்டு நள்ளிரவில் அங்கு சென்று அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், சஜித் தனது நண்பர்களான லிட்டில் ஜான், ராணுவ வீரர் கிரீஸ் ஆகியோருக்கு அந்த வீடியோவை அனுப்பியிருக்கிறார். அவர்கள் இருவரும் அந்த மாணவியை மிரட்டிப் பணியவைக்கப் பார்த்திருக்கிறார்கள். சுதாரித்துக்கொண்ட மாணவி இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்தரிப்புப் படம்

போலீஸார் விசாரணை நடத்தி ஜான் பிரிட்டோ, லிட்டில் ஜான் ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். ராணுவ வீரர்களான சஜித், கிரீஸ் ஆகியோரைக் கைதுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ராணுவ வீரர்களுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.