Published:Updated:

நீலகிரி: மனைவியின் தங்கையைக் கடத்திய விவகாரம்... கூடலூர் எஸ்.ஐ டிஸ்மிஸ் - என்ன நடந்தது?

வெங்கடாச்சலம்

மதுரை அருகிலுள்ள சோதனைச்சாவடியில், மனைவி சத்யாவைக் கீழே இறக்கி விட்டுவிட்டு மனைவியின் தங்கையை மட்டும் காரில் கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றிருக்கிறார்.

நீலகிரி: மனைவியின் தங்கையைக் கடத்திய விவகாரம்... கூடலூர் எஸ்.ஐ டிஸ்மிஸ் - என்ன நடந்தது?

மதுரை அருகிலுள்ள சோதனைச்சாவடியில், மனைவி சத்யாவைக் கீழே இறக்கி விட்டுவிட்டு மனைவியின் தங்கையை மட்டும் காரில் கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றிருக்கிறார்.

Published:Updated:
வெங்கடாச்சலம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். 35 வயதான இவர் நீலகிரி மாவட்டம், கூடலூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், ஒரு பெண்ணைக் கடத்திய விவகாரம் காரணமாக வெங்கடாச்சலத்தைப் பணியிலிருந்து நீக்கியதாக கோவை சரக டி.ஐ.ஜி-யிடமிருந்து திடீர் உத்தரவு வந்துள்ளது.

வெங்கடாச்சலம் டிஸ்மிஸ் செய்யப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினரிடம் பேசினோம். ``வெங்கடாச்சலத்துக்கு திருமணமாகி சத்யா எனும் மனைவி இருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மனைவியின் தங்கையைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணம் இவருக்குத் தோன்றியிருக்கிறது. 2018-ம் ஆண்டு கோபிச்செட்டிப்பாளையம் மதுவிலக்கு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது, காலேஜில் படித்துவந்த மனைவியின் தங்கையையும் அழைத்துக்கொண்டு மதுரையிலுள்ள ஒரு கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

 Police
Police
Photo: Vikatan

மதுரை அருகிலுள்ள சோதனைச்சாவடியில், மனைவி சத்யாவைக் கீழே இறக்கிவிட்டுவிட்டு மனைவியின் தங்கையை மட்டும் காரில் கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி சத்யா, சோதனைச்சாவடியில் இருந்த போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். உடனடியாக அந்தியூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரைக்குச் செல்லும் வழியிலேயே வெங்கடாச்சலத்தை மடக்கிப் பிடித்துள்ளனர். கடத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து வெங்கடாச்சலத்தை சிறையில் அடைத்துள்ளனர். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த வெங்கடாச்சலம் மீண்டும் காவல்துறை பணியில் சேர்ந்தார். நீலகிரி மாவட்டம், கூடலூர் காவல் நிலையத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில் நடைபெற்ற விசாரணையில் அவர்மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதனால், கடத்தல் வழக்கு சம்பந்தமாக வெங்கடாச்சலத்தை பணிநீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்" என்றனர்.