Published:Updated:

உயிருடன் இருப்பவருக்குப் போலி இறப்புச் சான்றிதழ்! - நில மோசடிக்குத் துணைபோன சார்பதிவாளர் கைது

பிரான்ஸில் வசிக்கும் ஆனந்த் வந்தவாசி அருகே உயிரிழந்து விட்டதாகக் கூறி போலி ஆவணங்களின் மூலம் இறப்புச் சான்றிதழ் தயாரித்திருக்கிறார்.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடையை அடுத்த அன்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக நெடுங்காடு அருகே பருத்திக்குடி கிராமத்தில் 15 ஏக்கர் நஞ்சை நிலம் உள்ளது. அதை அவரின் உறவினர் தேவராஜ் என்பவர் பராமரித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஆனந்துக்கும் தேவராஜுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆனந்தின் நிலம் பராமரிப்பின்றி தரிசாகிப் போனது.

ஆனந்த்
ஆனந்த்

இந்த நிலையில் தேவராஜ், பிரான்ஸில் வசிக்கும் ஆனந்த் வந்தவாசி அருகே உயிரிழந்து விட்டதாகக் கூறி போலி ஆவணங்களின் மூலம் இறப்புச் சான்றிதழ் தயாரித்திருக்கிறார். மேலும், ஆனந்துக்குச் சொந்தமான நிலத்தை தன் பெயருக்கு உயில் எழுதி, அதன் மூலம், பாஸ்கர் மற்றும் சையது ஆகிய இருவரின் பெயரில் அதை பத்திரப்பதிவு செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதற்கு திருநள்ளாறு சார்பதிவாளர் முருகானந்தம் மறுத்திருக்கிறார்.

காஞ்சிபுரம்: பத்திரப் பதிவுக்கு ரூ.20,000 லஞ்சம்; இணை சார் பதிவாளர், புரோக்கர் இருவரிடம் விசாரணை!

அதையடுத்து, தேவராஜ், சையது, பாஸ்கர் ஆகிய மூவரும் சார்பதிவாளர் முருகானந்தம் விடுமுறையில் இருந்த நேரத்தில், பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜெயக்குமார் என்பவர் மூலம் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஆனந்தின் உறவினர் குணசேகரன் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிகாரிகா பட்டிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து, தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், போலி இறப்புச் சான்றிதழ் தயாரித்து, போலி உயில் மூலம் ரூ. 4 கோடி மதிப்பிலான சொத்து விற்கப்பட்டது தெரியவந்தது.

போலி இறப்பு சான்றிதழ் தயாரித்தவர்
போலி இறப்பு சான்றிதழ் தயாரித்தவர்

அதையடுத்து, தேவராஜ், சையது, பாஸ்கர் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், காரைக்காலைச் சேர்ந்த பொறுப்பு சார்பதிவாளர் ஜெயக்குமாரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து, சென்னையில் தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரையும் தனிப்படை போலீஸார் நேற்றைய தினம் கைது செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு