Published:Updated:

பத்திரப்பதிவு அலுவலக ஜன்னல் கம்பியில் லஞ்சப் பணம் - சிக்கிய நான்கரை லட்சம் ரூபாய், 78 பத்திரங்கள்!

பத்திரப்பதிவு அலுவக ஜன்னலில் சொருகப்பட்ட பணம்

பொறுப்பு சார்பதிவாளராகச் செயல்பட்ட சுவாமிதோப்பு விஜயநகரியைச் சேர்ந்த சுப்பையா, சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 4 பேர், இடைத்தரகர்கள் 6 பேர் என 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

முறைகேடாக பத்திரப்பதிவு செய்வதற்கு சில சார்பதிவாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. அந்தச் சமயத்தில் அவருக்குக் கட்டாய விடுப்பு கொடுத்துவிட்டு, வேறு அலுவலரை நியமித்து பத்திரப்பதிவு செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெறும். அது போன்ற ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்திருக்கிறது. இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராகப் பணியாற்றிவந்தவர் நேற்று விடுப்பில் இருந்திருக்கிறார். அவருக்கு பதிலாக மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உதவி சார்பதிவாளராக பணியாற்றும் சுப்பையா என்பவர் அங்கு பணிபுரிந்திருக்கிறார். அவரை இரணியலில் பணிபுரிய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் ஆன்லைனின் முன்பதிவு செய்து டோக்கன் பெற முடியாமல் தவித்தனர். அதே சமயம் அரசு அனுமதி பெறாத வீட்டுமனைகளுக்கு சட்டவிரோதமாக டோக்கன் வழங்கி முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்துவருவதாக சிலர் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசியத் தகவல் அளித்தனர்.

பிடிபட்ட லஞ்சப் பணமும், பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையாவும் பணமும்
பிடிபட்ட லஞ்சப் பணமும், பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையாவும் பணமும்

இதையடுத்து நேற்று மாலை திடீரென மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளைக் கண்டதும் சில புரோக்கர்கள் ஓட்டம்பிடித்தனர். அலுவலக ஊழியர்கள் அலுவலக ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் பணத்தைச் சொருகி மறைத்துவைத்தனர்.

சார்பதிவளர் அலுவலகத்தில் நேற்று இரவு வரை நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.4,52,800 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முறைகேடாகப் பதிவுசெய்ததாகக் கூறப்படும் 78 வீட்டுமனைப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொறுப்பு சார்பதிவாளராகச் செயல்பட்ட சுவாமிதோப்பு விஜயநகரியைச் சேர்ந்த சுப்பையா மற்றும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் நான்கு பேர், இடைத்தரகர்கள் ஆறு பேர் என 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். கைப்பற்றப்பட்ட 78 பத்திரங்களும் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசரணை நடத்திவருகின்றனர்.