Published:Updated:

சேலம் பெண்கள் சிறையில் 2 பெண் காவலர்கள் திடீர் மாற்றம்! - என்ன காரணம்?

சேலம் பெண்கள் சிறை

சேலம் பெண்கள் சிறையில் நீண்ட நாள்களாக பணியாற்றி வரும் 2 ஏட்டுகள் திடீரென பணியிட மாற்ற செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் பெண்கள் சிறையில் 2 பெண் காவலர்கள் திடீர் மாற்றம்! - என்ன காரணம்?

சேலம் பெண்கள் சிறையில் நீண்ட நாள்களாக பணியாற்றி வரும் 2 ஏட்டுகள் திடீரென பணியிட மாற்ற செய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
சேலம் பெண்கள் சிறை

சேலம் ஏற்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெண்கள் கிளைச் சிறை. இதில், வார்டன்களுக்கு இடையே கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. இதனால் பாரா புத்தகம் கிழிப்பது என்று அரசு ஆவணங்கள் பலமுறை சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெண்கள் கிளைச் சிறையில் இரண்டு வார்டன்கள் லெஸ்பியன் விவகாரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். இதில், லெஸ்பியன் விவகாரத்தில் எந்தவித மோதலும் நடைபெறவில்லை என்றும், தவறான தகவல்களை வெளியில் பரப்புவோர் யார் என்று கணடறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம்
சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம்

இந்த நிலையில் சேலம் கிளைச் சிறையில் நீண்ட நாள்களாக பணியாற்றி வந்த பிரேமாவதி, ராதா எனும் 2 ஏட்டுகள் திடீரென வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றம் செய்யப்பட்ட இரண்டு ஏட்டுகளில் பிரேமாவதி என்பவர் திருச்சி சிறைக்கும், ராதா என்பவர் வேலூர் சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல வேலூரில் இருக்கும் ஜெயமணியும், திருச்சியில் இருக்கும் அம்பிகாவும், சேலம் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் இந்த பணியிட மாற்றத்துக்கு, நீண்ட நாள்களாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்தது தான் காரணம் எனச் சொல்லப்பட்டுள்ளது.