Published:Updated:

நடிகை தற்கொலை: ``துனிஷாவின் கவலைக்கு அவர் குடும்பத்தினர்தான் காரணம்!"- காதலன் ஷீஸான் குடும்பம்

ஷீஸான் மொகமத் கான் சகோதரிகள்

``துனிஷா தனக்குத் தேவையான பணத்தைக்கூட அடிக்கடி தன் தாயாரிடம் கெஞ்சிக் கேட்டுத்தான் பெறுவார்." - ஷீஸான் குடும்பத்தினர்

நடிகை தற்கொலை: ``துனிஷாவின் கவலைக்கு அவர் குடும்பத்தினர்தான் காரணம்!"- காதலன் ஷீஸான் குடும்பம்

``துனிஷா தனக்குத் தேவையான பணத்தைக்கூட அடிக்கடி தன் தாயாரிடம் கெஞ்சிக் கேட்டுத்தான் பெறுவார்." - ஷீஸான் குடும்பத்தினர்

Published:Updated:
ஷீஸான் மொகமத் கான் சகோதரிகள்

பாலிவுட் படங்கள், டி.வி நிகழ்ச்சிகளில் நடித்துவந்தவர் துனிஷா சர்மா. சமீபத்தில் இவர் மும்பையின் புறநகர்ப் பகுதியில் படப்பிடிப்பின் இடைவெளியில் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலை தொடர்பாக அவருடைய காதலன் ஷீஸான் மொகமத் கான் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஷீஸான் மொகமத் கான் தன் காதலியை இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தியதாகவும், பர்தா அணியும்படி நிர்ப்பந்தம் செய்ததாகவும், அதோடு ஷீஸானுக்கு வேறு பெண்களுடனும் தொடர்பு இருந்ததாகவும் தற்கொலை செய்துகொண்ட நடிகையின் தாயார் வனிதா சர்மா குற்றம்சாட்டியிருந்தார்.

நடிகை தற்கொலை: ``துனிஷாவின் கவலைக்கு அவர் குடும்பத்தினர்தான் காரணம்!"- காதலன் ஷீஸான் குடும்பம்

இதற்கு பதிலளிக்கும்விதமாக இன்று ஷிஸான் குடும்பத்தினர், குறிப்பாக அவருடைய சகோதரிகள் ஃபலாக் நாஸ், ஷஃபாக் நாஸ், தாயார், வழக்கறிஞர் சைலேந்திர் மிஸ்ரா ஆகியோர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, ``துனிஷா சர்மாவின் தற்கொலைக்கு நாங்கள் காரணம் இல்லை. ஷிஸானுக்கு வேறு எந்தப் பெண்ணுடனும் பழக்கமோ, தொடர்போ கிடையாது. அதோடு துனிஷாவை நாங்கள் பர்தா அணியும்படிச் சொன்னதும் கிடையாது. துனிஷாவின் தாயார் வனிதா, துனிஷா பர்தா அணிந்தபடி வெளியிட்ட புகைப்படம் டி.வி நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டதாகும்.

இந்தத் தற்கொலையின்போது மாமா என்று கூறி பேட்டியளித்தவர் உண்மையில் துனிஷாவின் மாமா கிடையாது. துனிஷாவிடம் மேலாளராக இருந்தவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரை வேலையைவிட்டு துனிஷா நீக்கியிருந்தார். துனிஷாவுக்கும் சண்டிகரைச் சேர்ந்த சஞ்சீவ் கவுசல் என்பவருக்கும் உறவு சரியில்லாமல் இருந்தது. ஆனால் சஞ்சீவ் கவுசலும், வனிதா சர்மாவும்தான் துனிஷா சர்மாவின் பணத்தை கன்ட்ரோலில் வைத்திருந்தனர். துனிஷா தன் சொந்தப் பணத்தை வாங்குவதற்குக்கூட அடிக்கடி, தன் தாயாரிடம் கெஞ்சிக் கேட்டுத்தான் பெறுவார்.

துனிஷா சர்மா -  ஷீஸான் மொகமத் கான்
துனிஷா சர்மா - ஷீஸான் மொகமத் கான்
டிவிட்டர்

சஞ்சீவ் கவுசல் பெயரைக்கேட்டாலே துனிஷா பயப்படுவார். சஞ்சீவ் கவுசலின் தூண்டுதலின் பேரில் வனிதா தன் மகளின் போனை பிடுங்கி உடைத்தார். அதோடு கழுத்தை நெரித்துக் கொலைசெய்ய முயன்றனர்'' எனத் தெரிவித்தனர்.

மேலும், ``துனிஷாவின் வாழ்க்கையை அவருடைய தாயார் வனிதாவும், சஞ்சீவ் கவுசலும்தான் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர். துனிஷாவின் மனச்சோர்வுக்கும், கவலைக்கும் அவருடைய குடும்பத்தினர்தான் காரணம். துனிஷாவின் தாயார், தன் மகளைச் சரியாக கவனிக்கத் தவறிவிட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார்'' என்று குற்றம்சாட்டினர்.