Published:Updated:

`முறை தவறிய கணவர்.. புகார் அளித்தும் பலனில்லை!’ -ஆட்சியர் அலுவகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

suicide attempt
suicide attempt

நான் சிறுமுகை காவல் நிலையத்தில் புகாரளித்தேன். ஆனால், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதைச் சாதகமாக்கிக்கொண்ட அவர் எங்களை கொலை செய்யாமல் விடமாட்டேன் எனத் தேடிவருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர முயற்சிகளும் ஆலோசனைக் கூட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பரபரப்பாக இருந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நண்பகல் 12 மணிக்கு சுமார் 40 வயதுப் பெண், இரண்டு சிறுமிகளையும் ஒரு சிறுவனையும் அழைத்துக்கொண்டுவந்தார்.

suicide attempt
suicide attempt

தண்ணீர் பாட்டிலில் மறைத்துக்கொண்டுவந்த மண்ணெண்ணையை எடுத்து திடீரென அவரது உடலில் ஊற்றிக்கொண்டு பற்றவைக்க முயற்சி செய்தார். இதைக்கண்ட சில செய்தியாளர்கள் பதறி ஓடி மண்ணெண்ணெய் பாட்டிலைப் பிடுங்கி வீசி அந்தப் பெண்ணைக் காப்பாற்றினர். இந்தச் சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அந்தப் பெண் மீது தண்ணீரை ஊற்றினர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பெயர் ரமலா என்றும் மேட்டுப்பாளையம் சிறுமுகை எஸ்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா என்பவரை கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர் காவலர்களிடம், `எங்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

suicide attempt
suicide attempt

நாங்கள் வசித்து வந்த சிறுமுகை அருகில் உள்ள எஸ்.எஸ்.நகரில் எனது கணவர் எங்களது மகளிடம் தவறாக நடக்க முயற்சிசெய்தார். இது தொடர்பாக நான் சிறுமுகை காவல் நிலையத்தில் புகாரளித்தேன். ஆனால், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதைச் சாதகமாக்கிக்கொண்ட அவர் எங்களை கொலை செய்யாமல் விடமாட்டேன் எனத் தேடிவருகிறார்.

நாங்கள் அவரிடமிருந்து தப்பி, கூடலூரில் உள்ள எனது சகோதரி வீட்டிற்கு வந்துவிட்டோம். அங்கு வந்தும் எங்களை அவர் மிரட்டி வருகிறார். மேலும், இது தொடர்பாகக் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகாரளித்தேன். அவர்கள், நீங்கள் சிறுமுகையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அங்கு சென்று புகார் அளியுங்கள் என்று கூறிவிட்டனர். இந்நிலையில், எனது கணவர் என் மீதும், எனது சகோதரி மீதும் சிறுமுகை காவல் நிலையத்தில் அவர் பொய்ப் புகார் ஒன்று அளித்துள்ளார்.

RAMALA
RAMALA

அந்தப் புகாரின் பேரில், எங்களை சிறுமுகை காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு வரும்படி அழைக்கின்றனர்.

அங்கு சென்றால், என் கணவர் மற்றும் போலீசாரும் இணைந்து எங்களை ஏதேனும் செய்து விடுவார்கள். என் கணவர் மீது யாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில், எனது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால், நானும் எனது குழந்தைகளும் தீக்குளிக்க முயற்சி செய்தோம். ஆனால், அதற்குள் எங்களை சிலர் காப்பாற்றிவிட்டனர்," எனக் கண்ணீர் வடித்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு