Published:Updated:

ரயில் நிலையத்தில் ஆண் சடலத்துடன் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸ்... போலீஸ் விசாரணை! - நடந்தது என்ன?

பஞ்சாப்

பஞ்சாப் ரயில் நிலையத்தில் நீண்ட நேரமாகக் கிடந்த சூட்கேஸில் ஆண் சடலம் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரயில் நிலையத்தில் ஆண் சடலத்துடன் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸ்... போலீஸ் விசாரணை! - நடந்தது என்ன?

பஞ்சாப் ரயில் நிலையத்தில் நீண்ட நேரமாகக் கிடந்த சூட்கேஸில் ஆண் சடலம் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தின் ரயில் நிலையமொன்றில், ஆண் சடலத்துடன் சூட்கேஸ் ஒன்று கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாப்பின் ஜலந்தர் ரயில் நிலையத்தில் காலை வேளையில், சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று தனியாகக் கிடந்திருக்கிறது. நெடுநேரமாகியும் யாரும் அந்த சூட்கேஸை எடுக்க வராததைக் கண்ட ஒரு நபர் அதனருகே சென்றிருக்கிறார்.

பஞ்சாப்
பஞ்சாப்

அப்போது, சூட்கேஸின் வெளியே ஒரு கால் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட அந்த நபர், உடனடியாக ரயில்வே போலீஸைத் தொடர்புகொண்டார். அதையடுத்து தடயவியல் குழு மற்றும் மோப்பநாய் படையுடன், போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போலீஸார், சூட்கேஸைக் கைப்பற்றி அதனுள் இருந்த ஆண் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பஞ்சாப்
பஞ்சாப்

அதைத் தொடர்ந்து ரயில் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்ததில், ரயில் நிலையத்துக்கு வெளியே ஒரு நபர் சூட்கேஸைவிட்டுச் செல்வது தெரியவருகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாகக் கூறிய போலீஸ் அதிகாரியொருவர்,`` திங்கள்கிழமை இரவிலிருந்தே அந்த சூட்கேஸ் அங்கு கிடந்திருக்கிறது, அதனுள் இருக்கும் சடலம் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை'' என்றார்.