Published:Updated:

பள்ளிக் காலத்திலேயே சீட்டிங்; நண்பர்கள் கூட்டு! -கைதுக்குப் பிறகு அழிக்கப்பட்ட சுஜியின் இ-மெயில்கள்

கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி
கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி

சுஜி கைது செய்யப்பட்ட பிறகுதான் அந்த மெயில்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியம் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெண் மருத்துவரைக் காதலிப்பதாக ஏமாற்றிப் பணம் பறித்ததுடன் அவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற சுஜி (26) கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நாகர்கோவில் நேசமணிநகர் காவல்நிலையத்தில் மேலும் ஒரு பெண் புகார் அளித்திருக்கிறார். அந்தப் பெண்ணிடம் நகை மற்றும் பணத்தைப் பறித்து மோசடி செய்துள்ளார் சுஜி.

சுஜி வழக்கை விசாரிக்கும் போலீஸார் அவருடன் பள்ளியில் படித்த சில நண்பர்களையும் விசாரித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும்போதே நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை சுஜி ஏமாற்றியுள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் காசி என்ற சுஜியின் மொபைல் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரது கோழிப்பண்ணையில் இருந்து லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த லேப்டாப் சென்னை பெண் மருத்துவர் வாங்கிக்கொடுத்தது எனத் தெரியவந்துள்ளது. லேப்டாப்-ஐ திறந்து அதில் உள்ள தகவல்களை எடுக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளர். இந்தநிலையில் சுஜி கைது செய்யப்பட்ட பிறகு அவரது மெயிலில் உள்ள சில முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காசி என்ற சுஜி
காசி என்ற சுஜி

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், " சுஜியைக் கைது செய்த உடனேயே அவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், அவரை ரிமாண்டுக்கு அனுப்பிய பிறகுதான் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே, லேப்டாப்பை ஓப்பன் செய்து அதில் உள்ள ஆவணங்களை எடுக்க அதுசம்பந்தப்பட்ட நிபுணர்களின் உதவியை நாடியுள்ளோம். இதற்கிடையில் சுஜியின் மெயில்கள் பலவும் அழிக்கப்பட்டுள்ளன. சுஜியைக் கைது செய்யப்பட்ட பிறகுதான் அந்த மெயில்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியம் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுஜியைக் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய சமயத்தில் அவரை பார்க்க உறவினரான இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். யாரும் பார்க்காத சமயத்தில் அவரிடம் இ-மெயில் ஐ.டி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றைக் கொடுத்து அனைத்து மெயில்களையும் டெலிட் செய்யும்படி கூறியதாகவும் அதன்படி அந்த இளைஞர் மெயிலை டெலிட் செய்ததாகவும் தகவல் கிடைத்தது. தொடர்ந்து அவரது உறவினரான இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இன்ஜினீயர் சுஜி என்கிற காசி
இன்ஜினீயர் சுஜி என்கிற காசி

ஆனால், கம்ப்யூட்டரில் கைதேர்ந்த சுஜியின் நண்பர் ஒருவர் மெயிலை டெலிட் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. சுஜி கைது செய்யப்பட்ட உடன் முதல் வேலையாக அவர் மெயில்களை அழித்திருக்கலாம். அழிக்கப்பட்ட மெயில்களை விரைவில் ரெகவர் செய்து ஆதாரங்கள் கைப்பற்றப்படும். சுஜிக்கு உதவிய நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்கின்றனர் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு