Published:Updated:

மகன்கள் மூலம் பழிவாங்கிய விமானப்படை ஊழியர்... சூலூர் கேந்திரிய வித்யாலயா வழக்கின் பின்னணி என்ன?

கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா

ஆத்திரமடைந்த ராம்சிங், தன் மகன்கள் மூலம் பள்ளி நிர்வாகத்தினரை பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை அருகே கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 11-ம் வகுப்பு படிக்கும் பீகார் மாணவர் ஒருவர், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தன்னை பாலியல் கொடுமை செய்ததாக சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா

இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மூன்று பெண் ஆசிரியர்கள் மீது போக்ஸோ மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு பதிவுசெய்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், திங்கள் கிழமை அந்தப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்போது அவர்கள், "அந்த பீகார் மாணவன்தான் ஒழுங்கீனமாக நடந்துகொண்டான். அவனும், அவனின் தம்பியும் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்துவருகின்றனர்.

போராட்டம்
போராட்டம்

பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வருவது, சுவர் ஏறிக் குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கண்டித்ததால், பள்ளி நிர்வாகம் மீது பொய்ப் புகார் அளித்துள்ளனர்.

எனவே, ஆசிரியர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்துவிட்டு, அந்த 2 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், அந்த 2 மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகமும் போலீஸில் புகார் அளித்தது.

கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா

அதன் அடிப்படையில் அந்த 2 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். மாணவர்கள் டான்போஸ்கோ அன்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சிலரிடம் பேசினோம், "மாணவர்களின் தந்தை ஹரே ராம் சிங் சூலூர் விமானப்படை தளத்தில் பணியாற்றி வருகிறார். அவரின் மூத்த மகன் 11-ம் வகுப்பு, இளைய மகன் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். ஹரே ராம்சிங் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்.

ராம்சிங்
ராம்சிங்
`பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டாரா பீகார் மாணவர்?'-சர்ச்சையில் சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி

ஒருமுறை பெற்றோர் - ஆசிரியர் மீட்டிங் நடந்தது. அப்போது, இளைய மகன் குறைவான மதிப்பெண் எடுத்தது தொடர்பாக பெண் ஆசிரியர் ஒருவர் ராம்சிங்கிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த ராம்சிங் மார்க் ஷீட்டை கிழித்துப் போட்டுவிட்டு, அந்த ஆசிரியையை அடித்துள்ளார்.

இதையடுத்து, அந்த ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் சூலூர் விமானப்படைத் தளம் மற்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து, இரண்டு தரப்பினரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனால், மேலும் ஆத்திரமடைந்த ராம்சிங், தன் மகன்கள் மூலம் பள்ளி நிர்வாகத்தினரை பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா

வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களிடம் விதண்டாவாதமாக கேள்வி கேட்டு, கோபப்பட வைப்பது, அதற்கு ஆசிரியர்கள் கோபப்பட்டு பேசுவதை வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

அப்படி ஒருமுறை தலைமை ஆசிரியர் மேகநாதன் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தபோது, அவரை 11-ம் வகுப்பு மாணவன் பயங்கர டார்ச்சர் செய்துள்ளான். இதனால், அந்த மாணவனை அவர் கண்டித்துள்ளார்.

இதைக் காரணம்காட்டி, அவர் மீது அப்போதே ஒரு பொய்ப் புகாரை போலீஸில் கொடுத்திருந்தனர். அதில், அவர் மீது வழக்கும் பதிவு செய்துவிட்டனர். இதனால், பயந்துபோன மேகநாதன் 70 நாள்களுக்குப் பள்ளிக்கு வரவில்லை. பின்பு பள்ளிக்குத் திரும்பிய அவர், அந்த மாணவர்களின் வகுப்புக்கு செல்வதைத் தவிர்த்து வந்தார்.

மனைவியுடன் ராம்சிங்
மனைவியுடன் ராம்சிங்

அதேபோல, மற்ற ஆசிரியர்களும் இவர்களின் வகுப்புக்குச் செல்ல பயந்தனர். அவர்கள் செய்யும் செயலால், எங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த மாணவர்களை சஸ்பெண்டு செய்திருந்தனர். சஸ்பெண்டு முடிந்து மீண்டும் பள்ளிக்குத் திரும்பிய அவனிடம் மொபைல் போன் இருப்பதை பி.டி ஆசிரியர் சோதனை செய்துள்ளார். அப்போது, உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த மொபைல் போனை பறிமுதலும் செய்துவிட்டனர். அன்றைய இரவே காவல்நிலையத்துக்குச் சென்று பாலியல் கொடுமை எனப் புகார் அளித்துவிட்டனர். இதனால், அந்த மாணவர்கள் மீண்டும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா
மேகா ஆகாஷ் முதல் அனிதா சம்பத் வரை... பாலியல் சீண்டல்களைச் சமாளித்தது எப்படி? #SpeakUp

ஆனால், கடந்த திங்கள் கிழமை மீண்டும் சுவர் ஏறிக் குதித்து பள்ளிக்குள் நுழைந்தனர். இதை இப்படியே விட்டால், எங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கும் என்பதால்தான் நாங்களே போராட்டத்தில் இறங்கிவிட்டோம். இப்போதும், அவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்ற அச்சத்தில் இருக்கிறோம்" என்றனர்.

பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்குவதற்குள், ராம்சிங் தரப்பினர் குழந்தைகள் உரிமைகள் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் வரை சென்றுவிட்டனர். மேலும், கோவை மாவட்ட எஸ்.பி சுஜித்குமாரையும் அணுகியுள்ளனர். சுஜித்குமாரும் பீகாரைச் சேர்ந்தவர் என்பதால், அவர் தங்களுக்கு உதவுவார் என்று கணக்குப் போட்டனர்.

டி.சி
டி.சி

இதனிடையே, விஷயம் பெரிதாகிவிட்டதால், ராம்சிங் மற்றும் அவரின் மனைவி ஷீலாகுமாரி ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இரண்டு மாணவர்களைப் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளனர். ஆனால், அவர்களின் டி.சி-யை வாங்க பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால், பள்ளி நுழைவாயிலில் இரண்டு மாணவர்களின் டி.சி-யையும் ஒட்டி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள ராம்சிங் மற்றும் ஷீலாகுமாரி, "எதற்காக எங்கள் மகன்களை இல்லத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

ஷீலாகுமாரி
ஷீலாகுமாரி
பொள்ளாச்சி முதல் தெலங்கானா வரை... 2019-ல் இந்தியாவை உலுக்கிய  பாலியல் வன்முறைக் குற்றங்கள்!

மூன்று நாள்களாக எங்களின் மகன்களை கண்ணில் காட்டவே இல்லை. போலீஸ்காரர்கள் காசு வாங்கிவிட்டனர்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு