Published:Updated:

கோவை: மிரட்டும் தொனியில் கானா பாடல்; இளைஞரை நூதன முறையில் தண்டித்த போலீஸ்

அச்சுறுத்தும் இளைஞர்கள்
News
அச்சுறுத்தும் இளைஞர்கள்

கோவை சூலூர் பகுதியில், `ஸ்வீட் ராஸ்கல்’, `எவரெஸ்ட் பாய்ஸ்’ எனப் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இளைஞர்கள் அட்ராசிட்டி செய்துவருகின்றனர்.

கோவை மாநகர் பகுதியில் மட்டுமல்லாமல், புறநகர்ப் பகுதிகளிலும், கானா பாடல்கள் பாடிக்கொண்டு, கையில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் சிறார்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

கோவை
கோவை

அந்த வகையில், கோவை சூலூர் பகுதியில், `ஸ்வீட் ராஸ்கல்’, `எவரெஸ்ட் பாய்ஸ்’ எனப் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இளைஞர்கள் அட்ராசிட்டி செய்துவருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்துவது, கேங் வார் என்ற பெயரில் மோதிக்கொள்வது என சூளுரை அலறவைத்துக்கொண்டிருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாக, ஏற்கெனவே சூலூர் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சூலூர் கேங்கைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், `திட்டம்போட்டு பண்ணிடுவேன் பெரிய மர்டரு. நீ கைவெச்சா.. தாண்டா மாட்ட சூலூர் பார்ரை' என்று அண்மையில் கையில் கத்தியுடன் கானா பாடல் பாடி, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் போலீஸார் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, போலீஸார் அந்தச் சிறுவன் குறித்து விசாரித்தனர். அப்போது அவர்மீது ஏற்கெனவே வழக்கு இருந்ததால், அவருக்கு சிறப்பு கவனிப்பு அளிக்க முடிவு செய்து, அவரைக் கைதுசெய்தனர். அதையடுத்து, அவரை நூதன முறையில் தண்டிக்கத் திட்டமிட்ட சூலூர் போலீஸார், அவர் ஸ்டைலிலேயே கானா பாடல் பாடவைத்து அதை வீடியோவாகப் பதிவுசெய்தனர். கையில் கத்தியை வைத்துக்கொண்டு கானா பாடிய அந்தச் சிறுவனை, `தப்பு மேல தப்பு... நான் பண்ணிட்டேண்டா பெரிய தப்பு' எனப் பாடவைத்தனர்.