Published:Updated:

சென்னை: கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை; இரவில் துணை நடிகைக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை ( representational image )

தனியாக வசித்துவரும் துணை நடிகையின் வீட்டு கதவைத் தட்டிய இளைஞர், அவரைக் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்தார். அடுத்து வந்த இளைஞர், துணை நடிகையிடமிருந்து நகை பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றார்.

சென்னை: கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை; இரவில் துணை நடிகைக்கு நேர்ந்த கொடூரம்

தனியாக வசித்துவரும் துணை நடிகையின் வீட்டு கதவைத் தட்டிய இளைஞர், அவரைக் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்தார். அடுத்து வந்த இளைஞர், துணை நடிகையிடமிருந்து நகை பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றார்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( representational image )

சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரம்யா (45) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் சில சினிமாக்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். கடந்த 8-ம் தேதி இரவு 10 மணியளவில் ரம்யாவின் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு அவர் கதவைத் திறந்தார். அப்போது இளைஞர் ஒருவர் வாசலில் நின்றுக் கொண்டிருந்தார். அவரிடம் யார் என்று ரம்யா கேட்டபோது திடீரென அந்த இளைஞர் ரம்யாவின் வாயைப் பொத்தினார். பிறகு கத்தி முனையில் அவரை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று கதவைப் பூட்டியுள்ளார். அதன்பிறகு அந்த இளைஞருடன் ரம்யா போராடி தோற்றுப் போனார்.

செல்வக்குமார்
செல்வக்குமார்

பின்னர் ரம்யாவை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், அதை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்தாகக் கூறப்படுகிறது. இந்தச் சமயத்தில் அந்த இளைஞரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்துச் பேசிய இளைஞர், கதவைத் திறந்தார். அப்போது வாசலில் இன்னொருவர் நின்றுக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ரம்யாவுக்கு எங்கோ பார்த்தது போல தெரிந்தது. அதற்குள் ரம்யாவை கத்தி முனையில் மிரட்டிய இளைஞர்கள், அவரிடமிருந்த செயின், கம்மல், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த ரம்யா, நடந்தச் சம்பவத்தை வாய்மொழியாக போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து ரம்யா கூறிய தகவலின்அடிப்படையில் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ரம்யா குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து மறுநாள் காலையில் ரம்யா, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்அடிப்படையில் உதவி கமிஷனர் கலியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமேகலை, மகாராஜன், தலைமைக் காவலர்கள் ஹேமக்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், துணை நடிகை ரம்யா அளித்த தகவலின்படி விசாரித்தனர். விசாரணையில் மதுரவாயைச் சேர்ந்த செல்வக்குமார் (21), அவருடன் வந்தவர் ராமாபுரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (37) எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு ரம்யாவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு கத்தியைக் காட்டி மிரட்டிய குற்றத்துக்காக செல்வக்குமாரையும் குற்றச் சம்பவத்துக்கு உறுதுணையாக இருந்த ராமாபுரத்தைச் சேர்ந்த கண்ணதாசனையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள், கத்தி, செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கண்ணதாசன்
கண்ணதாசன்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``துணை நடிகை ரம்யாவின் மகள்களுக்கு திருமணமாகி பேரன் பேத்திகள் உள்ளனர். தனியாக வசித்து வரும் ரம்யா குடியிருக்கும் பகுதியில் கண்ணதாசன், மீன்வியாபாரம் செய்து வந்தார். அப்போது அவரிடம் ரம்யா மீன்களை வாங்கியுள்ளார். அந்தப் பழக்கத்தில் ரம்யா, தனியாக வசித்து வரும் தகவலை பழைய இரும்பு கடையில் வேலைப்பார்த்து வரும் செல்வக்குமாரிடம் கண்ணதாசன் கூறியுள்ளார். இதையடுத்துதான் இரவு நேரத்தில் ரம்யா வீட்டுக்குச் சென்ற செல்வக்குமார், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 448, 376, 294 (பி), 397, 506 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்"என்றனர்.

துணை நடிகை ரம்யா, தனக்கு நடந்த கொடுமைகளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலையிடம் கண்ணீர்மல்க கூறியுள்ளார். சென்னையில் துணை நடிகைக்கு நள்ளிரவில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism