Published:Updated:

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மும்பை உயர்நீதிமன்ற `சர்ச்சை' தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!

இந்தத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் அதிர்வலைகள் எழுந்தன. இதையடுத்து உச்ச நீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இன்று தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர், அதே பகுதியில் வசிக்கும் 12 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக, சிறுமியின் பெற்றோர்கள் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் வழக்கை விசாரித்து, ஐபிசி 354, 363, 342 பிரிவுகளின் கீழும் போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிபதி, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்து, குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் 8-வது பிரிவின்படி குற்றவாளிக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையை அறிவித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட குற்றவாளி தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா வழங்கிய தீர்ப்பில், ``குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவருக்கு மூன்றாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனைக் கொடுக்க வேண்டுமானால் அது கடுமையான குற்றமாகவும், ஆதாரத்துடனும் இருக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றவாளி குழந்தையின் ஆடைகளை அகற்றிவிட்டு மார்பகங்களைத் தொட்டாரா அல்லது ஆடைக்குள் கைவிட்டரா என்பது நிரூபிக்கப்படவில்லை.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

மேலும், போக்ஸோ 7-வது சட்டப் பிரிவின்படி தோல் மீது தோல் பட்டு செய்யப்படும் அத்துமீறல்களும், பாலியல் வன்கொடுமை நோக்கத்துடன் பிறப்புறுப்பு, மார்பகங்களை நேரடியாகத் தொட்டிருந்தால் மட்டுமே அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுக்கொள்ளப்படும். சிறுமிகளை ஆடையின் மீது தொடுவது போக்ஸோ சட்டத்தின்படி குற்றமாகாது!" என்று கூறி போக்ஸோ சட்டத்தின் 8-வது பிரிவிலிருந்து குற்றவாளியை விடுவித்து, ஐ.பி.சி 354-ன் கீழ் குற்றவாளிக்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் அதிர்வலைகள் எழுந்தன. இதையடுத்து உச்ச நீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இன்று தடை விதித்துள்ளது.

`ஆடையில்லாமல் தொட்டால்தான் பாலியல் தாக்குதலா?!' - என்ன சொன்னது மும்பை உயர்நீதிமன்றம்?

மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வழக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு