Published:Updated:

``அனஸ்தீசியா கொடுக்காமல், அலற அலற அறுவை சிகிச்சை செய்தனர்!" - பெண்கள் பகீர் புகார்

அறுவை சிகிச்சை

பீகார் மாநிலத்தில் அரசு பொது சுகாதார மையங்களில் மயக்க மருந்து கொடுக்காமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

``அனஸ்தீசியா கொடுக்காமல், அலற அலற அறுவை சிகிச்சை செய்தனர்!" - பெண்கள் பகீர் புகார்

பீகார் மாநிலத்தில் அரசு பொது சுகாதார மையங்களில் மயக்க மருந்து கொடுக்காமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அறுவை சிகிச்சை

பீகார் மாநிலத்திலுள்ள அரசு சுகாதார மையங்களில் வார இறுதி நாள்களில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனமான `குளோபல் டெவலப்மென்ட் இனிஷியேட்டிவ்' இந்த முயற்சியில் பங்கெடுக்கிறது. இந்த நிலையில் பீகார் மாநிலம், ககாரியாவில் உள்ள இரண்டு அரசுப் பொது சுகாதார மையங்களில் கடந்த வார இறுதியில் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு சுமார் 24 கிராமப் பெண்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இரண்டு சுகாதார மையங்களில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.

பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு
பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு

அந்த இரண்டு மருத்துவமனைகளிலும், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்போது, அந்தப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான குமாரி பிரதிமா, ``நான் வலியால் அலறியபோது, நான்கு பேர் என் கைகளையும் கால்களையும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டனர். அப்படியேதான் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து முடித்தார்" எனத் தெரிவித்திருக்கிறார்.

மற்றொரு பெண், "அறுவை சிகிச்சை முழுவதும் நான் சுயநினைவுடன்தான் இருந்தேன். அறுவை சிகிச்சைக்கான கத்தியை என் உடலில் பயன்படுத்தியபோதெல்லாம் நான் கடுமையான வலியால் கத்தினேன்" எனத் தனது புகாரில் பதிவுசெய்திருக்கிறார். இந்த திகிலூட்டும் சம்பவம் தொடர்பாக ககாரியா மருத்துவமனை டி.எம் அலோக் ரஞ்சன் கோஷிடம் விசாரித்தபோது, ``புகார் அளித்த பெண்களின் வாக்குமூலத்தை வைத்து, இந்த விவகாரம் குறித்து விசாரித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவில் சர்ஜனிடம் கேட்டிருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

பர்பட்டா சுகாதார மையப் பொறுப்பாளர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன், ``ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உடல் அமைப்பு இருப்பதால், சில பெண்களுக்கு அது வேலை செய்யவில்லை" என்று விளக்கமளித்திருக்கிறார்.

2012-ம் ஆண்டு, பீகாரின் அராரியா மாவட்டத்தில், 53 கிராமப்புற பெண்களுக்கு இரண்டு மணி நேரத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பெண்களின் உயிரைப் பணயம்வைத்து மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.