Published:Updated:

தூத்துக்குடி: 5 மாதங்களுக்கு முன்பு மாயமான சர்வேயர் எலும்புக்கூடாக மீட்பு! – போலீஸ் விசாரணை

நாசரேத் காவல் நிலையம்

தூத்துக்குடியில் 5 மாதங்களுக்கு முன்பு மாயமான சர்வேயர், எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி: 5 மாதங்களுக்கு முன்பு மாயமான சர்வேயர் எலும்புக்கூடாக மீட்பு! – போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில் 5 மாதங்களுக்கு முன்பு மாயமான சர்வேயர், எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நாசரேத் காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சேர்ந்தவர் பாபு சங்கர். இவர், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக வேலை செய்து வந்தார். 39 வயதான இவருக்கு திருமணமாகவில்லை. இவர், கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி காலையில் வழக்கம்போல் தாலுகா அலுவலகத்திற்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றார். பின்னர், அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.

உயிரிழந்த பாபுராஜ்
உயிரிழந்த பாபுராஜ்

இது குறித்து கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி நாசரேத் காவல் நிலையத்தில் பாபு சங்கரின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நாசரேத் ஞானராஜ்நகர் பகுதியிலுள்ள தேரிக்காட்டு பகுதியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக ஆடு மேய்க்கச் சென்ற அப்பகுதியிலுள்ள சிலர் நாசரேத் காவல் நிலைய போலீஸாரிடம் தகவல் கூறினர், இதனையடுத்து அங்கு சென்ற போலீஸார் மனிதனின் மண்டை ஓடு, இடுப்பு எலும்பு, கால் எலும்பு ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், அதன் அருகில் ஒரு ஜோடி செருப்பும் கிடந்தது. அருகிலுள்ள பனைமரத்தின் துவாரத்தில் 5,680 ரூபாய் பணமும் சொருகி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் மாயமான பாபு சங்கரின் பெற்றோர், குடும்பத்தினரிடம் எலும்புக்கூடு இருந்த இடத்தில் கிடந்த செருப்பை காட்டினர். அவர்கள் அங்கு கிடந்த செருப்பு, பாபு சங்கருடையதுதான் எனக் கூறினர்.

எலும்புகூடு
எலும்புகூடு

போலீஸார் தடயவியல் பரிசோதனைக்காக திருநெல்வேலி தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதில், அந்த எலும்புக்கூடு பாபு சங்கருடையது என்று உறுதிப்படுத்தப்பட்டது. பாபுசங்கருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர், ஞானராஜ் நகர் தேரிக்காட்டு பகுதிக்கு மது குடிக்கச் சென்றபோது உயிரிழந்து இறந்தாரா? கொலைசெய்யப்பட்டு உயிரிழந்தாரா? எனவும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாசரேத்தில் மாயமான சர்வேயர் 5 மாமாதங்களுக்கு பின்னர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.