Published:Updated:

தேனி: கொரோனாவிலிருந்து மீண்டவர்; வீட்டில் தனிமை! தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்

தற்கொலை
தற்கொலை ( Representational Image )

`முதல்கட்ட விசாரணையில், கொரோனாவில் இருந்து மீண்டுவந்தும், வீட்டில் தனிமையில் இருந்ததால் ஏற்பட்ட மனஅழுத்தம்தான் தற்கொலை செய்யக் காரணம் என்பது தெரியவருகிறது.'

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காலேஜ் விளக்குப் பகுதியில் வசித்துவருபவர் துரை (வயது 52). பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் துரை, கொரோனா தொற்று காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, கடந்த 26-ம் தேதி வீடு திரும்பியுள்ளார்.

தேனி: பழக்கத்தைக் கண்டித்த உறவினர்கள்! - தற்கொலை முடிவை நாடிய இருவர்
பெரியகுளம்
பெரியகுளம்

அவரின் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு, தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதால், தனிமையில் இருந்துள்ளார் துரை. இதனால், கடும் மன அழுத்தத்தில் துரை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடலைக் கைப்பற்றிய தென்கரை போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.`முதல்கட்ட விசாரணையில், கொரோனாவில் இருந்து மீண்டுவந்தும், வீட்டில் தனிமையில் இருந்ததால் ஏற்பட்ட மனஅழுத்தம்தான் தற்கொலை செய்யக் காரணம் என்பது தெரியவருகிறது. இருந்தபோதும், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்கின்றனர் போலீஸார்.

தென்கரை போலீஸ் ஸ்டேஷன்
தென்கரை போலீஸ் ஸ்டேஷன்
தேனி: `தேடப்படும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம்’ - சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய இன்ஸ்பெக்டர்

கடந்த சில நாள்களுக்கு முன்னர், தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெத்தணன் (வயது65) என்பவர், தனது வீட்டில் இருந்த ஐந்து நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மன அழுத்தம் காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்றின் காரணமாக ஏற்படும் மன அழுத்தம், இறுதியில் தற்கொலைக்கு கொண்டு செல்வது தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு