Published:Updated:

`ஜீவ சமாதிக்கு உயில் எழுதி வைத்துள்ளேன்!'- நித்யானந்தா #Nithyananda #Kailaasa

நித்யானந்தா

`அண்ணாமலையைச் சுற்றி வந்து ஜீவசமாதி வைக்க உயிர் எழுதி வைத்துவிட்டேன்' என்று நித்யானந்தா இன்று அறிவித்துள்ளார்.

`ஜீவ சமாதிக்கு உயில் எழுதி வைத்துள்ளேன்!'- நித்யானந்தா #Nithyananda #Kailaasa

`அண்ணாமலையைச் சுற்றி வந்து ஜீவசமாதி வைக்க உயிர் எழுதி வைத்துவிட்டேன்' என்று நித்யானந்தா இன்று அறிவித்துள்ளார்.

Published:Updated:
நித்யானந்தா

சர்ச்சை சாமியார் நித்யானந்தா, எங்கு இருக்கிறார் என்பதுதான் இன்று அனைவரின் கேள்வி. ஆனால், அவரோ தினமும் முகநூல் லைவ் வீடியோவில் வந்து பேசிவருகிறார். தென்அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் என்ற தீவை விலைக்கு வாங்கி கைலாசா என்ற தனிநாட்டை நித்யானந்தா உருவாக்கியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அந்த நாட்டில்தான் நித்யானந்தா இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதே சமயம் இமயமலையில் நித்யானந்தா இருப்பதாகவும் இன்னொரு தகவல் வெளிவந்தவண்ணம் உள்ளது.

நித்யானந்தா
நித்யானந்தா

நித்யானந்தா, இன்று லைவ் வீடியோவில் பேசுகையில், ``நான் தினமும் அண்ணாமலையாரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நெட்டில் காட்டுகிறார்கள் அதைப் பார்க்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம். ஒரு உயில் எழுதி வைத்துவிட்டேன். இந்தியாவில் அண்ணாமலையைச் சுற்றி வந்து ஜீவ சமாதி வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன். அப்போது நான் மூன்று கண், இல்லை இரண்டு கண் இல்லை ஒற்றை கண் மூலமாகப் பார்க்கப் போகிறேன். அதை அந்த இறைவனே முடிவு பண்ணட்டும். நான் பெற்ற கல்வி, ஞான அறிவு பெருமான் கொடுத்தது. இன்னும் பெருமான் கொடுத்த, கொடுக்கிற, கொடுக்கப்போகிற நன்மைகளை மக்களுக்குக் கொடுப்பேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என் வாழ்க்கையில் திருவண்ணாமலை குரு பரம்பரை காஞ்சிபுரம் குரு பரம்பரை, மதுரை பரம்பரை உதவியாக இருந்துள்ளது. பக்தர்கள் கொடுக்கும் பணம் இந்தியாவின் நன்மைக்கும் குருபரம்பரை நன்மைக்கும் பயன்படும். அன்றும் இன்றும் ஒரு கப் தயிர்சாதம்தான் சாப்பிடுகிறேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வைகுண்டர் அய்யா இருக்கிறார். திருவண்ணாமலையில் வாழ்ந்த நாராயணசாமி சாப்பிடாமல் மலை உச்சியில் சித்தராக வாழ்ந்தார். அந்த ஞானத்தைத்தான் இப்போது நான் உலகிற்குக் கொடுக்கிறேன்" என்றார்.

நித்யானந்தா
நித்யானந்தா

நித்யானந்தாவை தீவிரமாக குஜராத் போலீஸார் தேடிவரும் சூழலில் கைலாசாவை தனி நாடாக்க ஜக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடியிருக்கிறது நித்யானந்தா தரப்பு. ஐக்கிய நாடுகள் சபைக்கு நித்யானந்தா தரப்பு அனுப்பிய ரகசிய கடிதத்தில், ``நித்யானந்தாவை தலைவராகக் கொண்ட இந்து ஆதி சைவ சிறுபான்மைச் சமூகம் இந்தியாவில் உள்ளது. இதில் 3 கோடி மக்கள் உள்ளனர். இந்தியாவில் உள்ள சில இந்து அமைப்புகள் எங்களுக்கு எதிராக பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகின்றன. தமிழகத்திலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் மொழி, தீவிரவாத அமைப்புகள் எங்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

293 வது மதுரை ஆதீனகர்த்தரான நித்யானந்தா, இந்து ஆதிவைச சிறுபான்மைச் சமூகத்தின் ஆன்மிகத் தலைவராக உள்ளார். அவரின் 3 வயதில் ஆன்மிக குருவாக ஞானிகளால் அடையாளம் காணப்பட்டவர். நித்யானந்தா மீது 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. சதானந்த கவுடா கர்நாடகாவில் முதலமைச்சராக இருந்த சமயத்தில் பிடதி ஆசிரமத்தை போலீஸார் கைப்பற்றினர். அப்போது பிடதி ஆசிரமம் சூறையாடப்பட்டு தீக்கிரையாகியது. ஆசிரமத்தில் இருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். நித்யானந்தா மீது ஆதாரமில்லாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாலியல் வழக்கில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை என்ற பெயரில் சித்ரவதைகள் நடந்தன.

நித்யானந்தா
நித்யானந்தா
இந்தியாவில் அண்ணாமலையைச் சுற்றி ஜீவ சமாதி வைக்க வேண்டும் என்று பக்தர்களிடம் சொல்லிவிட்டேன். அன்றும் இன்றும் ஒரு கப் தயிர்சாதம்தான் சாப்பிடுகிறேன்.
நித்யானந்தா

நித்யானந்தாவை கொலை செய்ய 100 தடவை முயற்சிகள் நடந்துள்ளன. அவரின் நலம் விரும்பிகளால் உணவில் விஷம் வைக்கப்பட்டது. அடுத்து நித்யானந்தா சென்ற கார் கவிழ்ந்தது. 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முகமுடி அணிந்தவர்கள் பட்டாக்கத்தியோடு பிடதி ஆசிரமத்துக்குள் நுழைந்து நித்யானந்தாவைக் கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது அவர், கழிவறைக்குள் சென்று உயிர்பிழைத்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஜக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் ஆணையம் தலையிட வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism