Published:Updated:

`பயிற்சியாளரின் பாலியல் தொல்லை!’ - வீடியோ மூலம் காட்டிக்கொடுத்த 15 வயதுச் சிறுமி

Surajit Ganguly
News
Surajit Ganguly

15 வயதுச் சிறுமி ஒருவர், தனக்கு நடக்கப்போகும் ஆபத்தை உணர்ந்தவராக, முன்கூட்டியே அந்த அறையில் செல்போன் கேமராவை ஆன் செய்து வைக்கிறார்.

பாலியல் வன்முறைகளுக்கு எதிராகத் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும், அதில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை. அதிலும், நல்ல பதவியில், பொறுப்பில் இருக்கும் சிலர், தனக்குக் கீழ் இருப்பவர்களை, அதிகாரம் கொண்டு பயன்படுத்தும் அவலங்கள் கொடுமையிலும் கொடுமை.

Sexual harassment
Sexual harassment

கோவாவில் நடைபெற்ற சம்பவம் அதே அளவு கொடூரமானது. கோவா நீச்சல் அணியின் மாநிலத் தலைமை பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்தவர் சுரஜித் கங்குலி. இவர் சிறுமி ஒருவரிடம் அத்துமீறும் வீடியோ இணையத்தில் பரவ, நாட்டின் விளையாட்டுத்துறையே ஆடிப்போனது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

15 வயதுச் சிறுமி ஒருவர், தனக்கு நடக்கப்போகும் ஆபத்தை உணர்ந்தவராக, முன்கூட்டியே அந்த அறையில் செல்போன் கேமராவை ஆன் செய்து வைக்கிறார். சிறிது நேரத்தில் அங்கு வரும் பயிற்சியாளர் சுரஜித் கங்குலி, அவரிடம் அத்துமீறி செயல்படுகிறார்.

`பயிற்சியாளரின் பாலியல் தொல்லை!’ - வீடியோ மூலம் காட்டிக்கொடுத்த 15 வயதுச் சிறுமி

இந்த விடியோவை பார்த்த சிலர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜுவை டேக் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர், ``விளையாட்டு ஆணையம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், இந்தக் குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு முதலில் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ட்வீட் செய்த அமைச்சர் கிரன் ரிஜ்ஜு, ``இந்த விவகாரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறேன். கோவா நீச்சல் சங்கம் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. இந்திய நீச்சல் சம்மேளனம், அவர் நாட்டில் எங்கும் பணியாற்றவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இது இந்தியாவில் இருக்கும் அனைத்து விளையாட்டு சம்மேளனத்துக்கும் பொருந்தும்” என்று காட்டமாகப் பதிவிட்டார்.

இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் சுரஜித் கங்குலி மீது காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தது. இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் காமத் பேசுகையில், ``இந்த வீடியோவை பார்த்த மறுகணமே அவரை நீக்க உத்தரவு பிறபித்துவிட்டோம். அவர் தொடர்பாக விசாரித்தபோது, மாணவர்களின் பெற்றோர்கள் பரிந்துரையின் அடிப்படையிலே அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒரு பயிற்சியாளராக அவரது செயல்பாடுதான் பெற்றோர்களின் பரிந்துரைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது” என்றார்.

இது தொடர்பாகக் கோவா நீச்சல் சங்க அதிகாரிகள் பேசுகையில், ``அவரை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டோம். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு பயிற்சியாளராக அவரது செயல்பாடு சிறப்பாக இருந்திருக்கிறது. இதற்கு முன் இதுபோன்ற எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை அவர் மீது வந்ததில்லை” என்றார்.

சுரஜித் கங்குலி
சுரஜித் கங்குலி

சுரஜித் கங்குலி, சர்வதேசப் போட்டிகளில் 12 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். 1984-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதலாவது பதக்கத்தை வென்றிருக்கிறார். தலைமை பியிற்சியாளரின் இந்தச் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.