Published:Updated:

சொகுசு காரில் கடத்தப்பட்ட உயர் ரக மதுபாட்டில்கள்! -போலீஸ் ரெய்டில் சிக்கிய நடிகையின் கார் டிரைவர்

மதுபாட்டில்கள்
மதுபாட்டில்கள் ( representational image )

மாமல்லபுரத்திலிருந்து சென்னைக்கு சொகுசு காரில் வந்த நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரிலிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மதுப்பிரியர்கள் கடத்தல் மதுபானங்களைக் கூடுதல் விலைக்கு வாங்கிவருகின்றனர். இதையடுத்து, வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு மதுபானங்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. எனவே, சென்னை மாவட்ட எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

மதுபானம்
மதுபானம்
representational image
`பாண்டிச்சேரி மதுபானம் போல வருமா?' - கடலூரில் விபரீதப் பயணம் மேற்கொள்ளும் குடிமகன்கள்

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை முட்டுக்காடு பகுதியில், கானத்தூர் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மாமல்லபுரத்திலிருந்து சொகுசுக் கார் ஒன்று அவ்வழியாக வந்தது. அதைத் தடுத்து நிறுத்திய போலீஸார், காரை சோதனை செய்தனர். அந்தக் காரில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனும் அவரின் சகோதரியும் இருந்தனர். அவர்களும் காரை சோதனைசெய்ய சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, காரின் டிக்கியைத் திறந்துபார்த்தபோது, அதில் மதுபானங்கள் இருந்தன. அதைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், காரின் டிரைவர் செல்வக்குமாரிடம் போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்து, ஜாமீனில் அவரை விடுவிடுத்தனர்.

மதுபாட்டில்கள்
மதுபாட்டில்கள்
representational image

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஊரடங்கையொட்டி தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகிறோம். விதிகளை மீறுபவர்கள்மீது தினமும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், புதுச்சேரியிலிருந்து வரும் வாகனங்களில் மதுபானங்கள் கடத்திவரப்படுகின்றன. அதைத் தடுக்கவும், முறையான அனுமதியில்லாமல் சென்னைக்குள் மக்கள் நுழைவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்த காரில் சோதனை நடத்தியதில் 96 பீர் பாட்டில்கள் மற்றும் 6 மதுபாட்டில்களும் இருந்தன. அதைப்பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு