Published:Updated:

அதிகரிக்கும் ரூ.2,000 போலி நோட்டுகள்... தமிழகம் 3-ம் இடம்... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ரூ.2,000
ரூ.2,000

புழக்கத்திலுள்ள போலி ரூபாய் நோட்டுகளில் 56 சதவிகிதம் 2,000 ரூபாய் போலி நோட்டுகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் போலி ரூபாய் நோட்டுகள் புதிதாக உருவாகாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனவா என்று கேட்டால், 'இல்லை' என்பதுதான் நமக்குக் கிடைக்கும் பதில்.

'புதிய நோட்டுகளை போலியாகத் தயாரிக்க முடியாது' என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்டாலும், போலி நோட்டுகளை அச்சடித்து வெளியிடுபவர்களுக்கு அது ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதுபோல் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு 2,000 ரூபாயை போலியாக அச்சடித்து வெளியிட்டு, அரசையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் சிலர்.

நவம்பர் 2016-க்குப் பிறகு புழக்கத்துக்கு வந்த கள்ள ரூபாய் நோட்டுகள் பற்றி இரண்டு நிறுவனங்கள் தரும் தகவல்களை அதிகாரபூர்வமானவையாக எடுத்துக்கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கி, வங்கிகளில் கைப்பற்றப் பட்ட போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையைச் சொல்கிறது. என்.சி.ஆர்.பி நிறுவனம், அமலாக்க நிறுவனங்களால் பறிமுதல் செய்யப் பட்ட தொகை யின் அடிப்படையில் சொல்கிறது.

அதிகரிக்கும் ரூ.2,000 போலி நோட்டுகள்... தமிழகம் 3-ம் இடம்... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

போலி ரூபாய் எவ்வளவு?

ரிசர்வ் வங்கி தரும் தகவல்கள்படி, 2017-18-ம் நிதியாண்டில் வங்கி அமைப்பில் மொத்தம் 17,929 போலி ரூ.2,000 நோட்டுகள் கண்டறியப்பட்டதாகவும், 2018-19-ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 21,847-ஆக அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, ரூ.2000 போலி ரூபாய் நோட்டுகள் 21.9% அதிகரித்திருக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

புழக்கத்திலுள்ள போலி ரூபாய் நோட்டுகளில் 56 சதவிகிதம் 2,000 ரூபாய் போலி நோட்டுகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016-ம் ஆண்டு முதல் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/37DF9sZ

குஜராத் மாநிலத்தில், நவம்பர் 2016-ம் ஆண்டு முதல் டிசம்பர் 2018-ம் ஆண்டு வரை ரூ.69 கோடி அளவுக்கு 2,000 ரூபாய் போலி நோட்டுகள் கண்டறியப்பட்டு அந்த மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. ரூ.35 கோடி அளவுக்கு போலி ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டு மேற்கு வங்கம் இரண்டாவது இடத்திலும், ரூ.28 கோடி அளவுக்கு 2,000 ரூபாய் போலி நோட்டுகள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன.

அதிகரிக்கும் ரூ.2,000 போலி நோட்டுகள்... தமிழகம் 3-ம் இடம்... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

போலி ரூ.2,000 நோட்டுகள் அதிக எண்ணிக்கையில் புழங்குவதால், ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.2,000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து அதிகார பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால், ரூ.2,000 நோட்டுகள் புதிதாக அச்சிடப் படுவது வெகுவாகக் குறைந்துவருவதாக ஆர்.டி.ஐ தகவல்கள் சொல்கின்றன.

இந்த நிலையில், போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டறிவது எப்படி என்று சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டோம். அவர்கள், "போலி நோட்டுகளைக் கண்டறியத் தனி வழிமுறை ஏதும் இல்லை. நம் ரூபாய் நோட்டுகளில் பல தனிப்பட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை வைத்து அசல் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காணலாம்.

உதாரணமாக, ரூ.2000 நோட்டில் 17 சிறப்புக் குறியீடுகள் உள்ளன. அவற்றைக்கொண்டு போலி ரூபாய் நோட்டுகளை எளிதில் இனம் காணலாம். ரூ.2000 நோட்டுகளைப்போலவே அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் பல தனிச் சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை வைத்து அசல் ரூபாய் நோட்டுகளைக் கண்டறியலாம்'' என்றார்கள்.

சிறப்புக் குறியீடுகள் என்னென்ன? - 14 அம்சங்களுடனான முழுமையான உஷார் டிப்ஸ் அறிய > போலி ரூபாய்... அதிர்ச்சி அறிக்கை..! - உஷார் டிப்ஸ் https://www.vikatan.com/government-and-politics/news/awareness-about-fake-currency

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு