Published:Updated:

``ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை; 15 வருடத்துக்கு எல்லை தாண்டக்கூடாது” - இலங்கை நீதிமன்றம்

கைது செய்யப்பட்ட மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ஒத்திவைத்து, 15 ஆண்டுகளுக்கு இலங்கை எல்லைக்குள் நுழைய கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

``ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை; 15 வருடத்துக்கு எல்லை தாண்டக்கூடாது” - இலங்கை நீதிமன்றம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ஒத்திவைத்து, 15 ஆண்டுகளுக்கு இலங்கை எல்லைக்குள் நுழைய கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Published:Updated:
கைது செய்யப்பட்ட மீனவர்கள்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி விசைப்படகு ஒன்றில் 12 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்களையும் கைது செய்து அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து, முழங்கா கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

மீனவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் 12 பேரையும் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து சிறைக் காவல் முடிந்து கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மீண்டும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களுக்கு மே மாதம் 12-ம் தேதி, அதாவது இன்று வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மீனவர்கள் 12 பேரையும் ஜாமினில் விடுதலை செய்ய ஒவ்வொரு மீனவருக்கும் தலா 2 கோடி வீதம் 24 கோடி பிணைத்தொகை செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டது, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிளிநொச்சி நீதிமன்றம்
கிளிநொச்சி நீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து இலங்கை நீதிமன்றத்தை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசியல் கட்சியினரும் இலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று சிறைக்காவல் முடிந்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் மீனவர்கள் 12 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி இரண்டு வருட சிறை தண்டனையை ஒத்திவைத்து, இனி 15 வருடத்திற்கு இலங்கை எல்லையை அனுமதியின்றி தாண்டக்கூடாது என்ற நிபந்தனையுடன் 12 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார். மேலும் விசைப்படகின் உரிமையாளர் ஜூலை 5-ம் தேதி இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும், அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் படகு விடுவிக்கப்படும், இல்லையென்றால் அரசுடமையாக்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரும் நிலைமை சீரான பிறகு தமிழகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism