Published:Updated:

அரியலூர்: பாலியல் அத்துமீறல், இரட்டை அர்த்தப் பேச்சு - பள்ளி மாணவி புகாரால் சிக்கிய தமிழ் ஆசிரியர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போலீஸார்
பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போலீஸார்

கடந்த மாதம் பத்தாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் அருள் செல்வன் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது குறித்து அந்த மாணவி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்திருக்கிறார்.

கரூரில் பள்ளி மாணவி ஒருவர், ``பாலியல் தொல்லையால் சாகுற கடைசிப் பொண்ணு நானாகத்தான் இருக்கணும்" என்று உருக்கமான கடிதத்தை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் பெண் பிள்ளைகள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்துக்கொண்டேயிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர்
அரியலூர்

இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிக்குத் தமிழ் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததை, கண்டித்து கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழ் ஆசிரியர் அருள் செல்வன்
பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழ் ஆசிரியர் அருள் செல்வன்

அரியலூர் மாவட்டம், காட்டுபிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு தமிழ் ஆசிரியராக அருள் செல்வன் என்பவர் வேலை பார்த்துவருகிறார். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் மனைவியும் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் பத்தாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் அருள் செல்வன் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது குறித்து அந்த மாணவி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்திருக்கிறார்.

ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இரண்டு நாள்களுக்கு முன்பு கார்த்திகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) என்ற எட்டாம் வகுப்பு மாணவியிடம் தமிழாசிரியர் அருள் செல்வன் தவறாக நடந்துகொண்டதோடு, இரட்டை அர்த்தத்திலும் பேசியிருக்கிறார். இது சம்பந்தமாக அந்த மாணவி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி விடுமுறையிலிருந்ததால் பொறுப்பு ஆசிரியரிடம் புகார் அளித்திருக்கிறார்.

தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி
தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி

அப்போது, ``எனக்கு ஏற்பட்டது போன்று வேறு எந்த மாணவிக்கும் ஏற்படக் கூடாது" என்று அந்த மாணவி கூறியிருக்கிறார். இது குறித்துத் தகவல் அறிந்த கிராம மக்கள் ஆசிரியர் அருள் செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

அரியலூர்: பாலியல் அத்துமீறல், இரட்டை அர்த்தப் பேச்சு - பள்ளி மாணவி புகாரால் சிக்கிய தமிழ் ஆசிரியர்!

அதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார், ஆசிரியர் அருள் செல்வனைக் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லாவிடம் பேசினோம். ``நாளுக்கு நாள் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவி நடந்தவற்றை முழுமையாகச் சொன்னதன் பேரில் அருள் செல்வனைக் கைதுசெய்திருக்கிறோம்.

அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா
அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா

பாலியல் புகாரை மறைத்த குற்றத்துக்காகப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரியையும் கைதுசெய்திருக்கிறோம். பாலியல் சீண்டல் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் முதலில் பெண் பிள்ளைகள் மீதான பாலியல் குற்றங்கள் நடப்பதாகக் கேள்விப்பட்டால் ஆசிரியர்கள் கண்டிப்பாக போலீஸாரிடம் தகவல் அளிக்க வேண்டும்.

தனக்கும் வேலைக்கும் பிரச்னை வந்துவிடும் என்று பயந்துகொண்டு வெளியில் சொல்லாமல் இருப்பதால்தான் இது போன்ற தவறுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. நம் வீட்டில் ஒரு பெண் குழந்தைக்கு நடந்திருந்தால் நாம் சும்மா இருப்போமா... அது போலத்தானே எல்லா பிள்ளைகளும்... தகவல் தெரிந்தால் அதிகாரிகளிடமோ அல்லது போலீஸாரிடமோ சொல்லுங்கள்.

இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு
இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு

போலீஸார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிகளுக்கு இது தொடர்பாக சர்க்குலர் அனுப்பச் சொல்லியிருக்கிறேன்.அவரும் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். இனி ஒரு பெண் பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது. இந்த விவகாரம் சாதியப் பிரச்னையாக மாறவிருந்ததை இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு லாகவமாகக் கையாண்டதால் அது தவிர்க்கப்பட்டது" என்றார்.

`பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும்’ -கரூர் பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு