Published:Updated:

குற்றச்செயல்களின் கூடாரமா தேனி..?! அச்சத்தில் ஓ.பி.எஸ். ஊர் மக்கள் #TamilnaduCrimeDiary

துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அடுத்தடுத்து நிகழும் குற்றச் சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். #TamilnaduCrimeDiary

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களால் பொதுமக்கள் அச்சமடைந்துவருகிறார்கள்.

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குற்றச்சம்பவங்கள், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பெரியகுளம் பகுதியில் உள்ள பெரும்பாலான மாணவர்கள், பெரியவர்களிடம் கஞ்சா புழக்கம் இருந்துவருகிறது. இந்நிலையில், மூன்று தினங்களுக்கு முன்னர், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியைச் சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர், கஞ்சா விற்பனை செய்யும் இருவர் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

கஞ்சா
கஞ்சா

இதை அறிந்துகொண்ட கஞ்சா வியாபாரிகள் சிலர், இரவு மனோஜ் வீட்டை முற்றுகையிட்டு கற்களைக்கொண்டு தாக்கியுள்ளனர். கதவைத் திறக்காமல் இருந்ததால், மனோஜ் உயிர்தப்பினார். இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார் மனோஜ். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சுமார் 50 பேர், மனோஜ் வீட்டைத் தாக்கிய கஞ்சா வியாபாரிகளைக் கைது செய்ய வேண்டும் எனக் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பெரியகுளம் துணைக்கண்காணிப்பாளர் தலையிட்டு, குற்றவாளிகளைக் கைது செய்வதாக உறுதியளித்தார்.

இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர், இளைஞர் ஒருவரை, பெரியகுளம் நகரின் முக்கியப் பகுதியில் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரியகுளம் எ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு (வயது 24), இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள், காயத்ரி (வயது 24) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். பெண் வீட்டாரின் சம்மதமில்லாமல் திருமணம் நடந்ததால், ராஜுவிற்கு அடிக்கடி கொலைமிரட்டல்கள் பெண் வீட்டாரிடமிருந்து வந்துள்ளது. இதனால், ராஜு மற்றும் காயத்ரி, கிராமத்திலிருந்து பெரியகுளம் ஸ்டேட் பாங்கு அருகே வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.

பெரியகுளம் காவல்நிலையம்
பெரியகுளம் காவல்நிலையம்
`நம்ம வீட்டுக்குள்ள இதென்ன வித்தியாசமா இருக்கு..?!' -குளித்தலை இளைஞருக்கு நேர்ந்த துயரம்

இந்த நிலையில், அருகே உள்ள மளிகை கடைக்கு வந்த ராஜுவை, அரிவாள் மற்றும் கட்டையால் மூவர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ராஜுவின் அலரல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவரவே, தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பினர். படுகாயமடைந்த ராஜு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த காவல்துறை, ராஜுவைத் தாக்கியது, காயத்ரியின் தந்தை சேகர் மற்றும் அவரது சகோதரர்கள் ராஜேஷ் மற்றும் பிரகாஷ் எனக் கண்டுபிடித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அக்காவுக்குப் பணம் கொடுக்காதீங்க!
ஓய்வூதிய பணத்துக்காகத் தந்தையைத் தாக்கிய மகன்கள்!

ஓய்வூதிய பணத்தைச் சகோதரிகளுக்குக் கொடுத்த தந்தை மீது கோபமடைந்த மகன்கள், அவர் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் டேனியல். ஓய்வு பெற்ற ஆசிரியர். 88 வயது நிரம்பிய முதியவரான அவருக்கு சாமுவேல், மோகன்ராய் என்கிற இரு மகன்களும் செல்வி, சத்தியசீலி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். டேனியலின் பிள்ளைகள் நால்வருக்கும் திருமணமாகி விட்டதால் அனைவரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியரான டேனியல் தனக்குக் கிடைக்கும் ஓய்வூதியப் பணத்தில் தனியாக வசித்து வருகிறார்.

ஓய்வூதிய பணத்துக்காகத் தந்தையைத் தாக்கிய மகன்கள்!
ஓய்வூதிய பணத்துக்காகத் தந்தையைத் தாக்கிய மகன்கள்!

ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வந்ததும் அந்தப் பணத்திலிருந்து தனது செலவுக்காகக் குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொண்டு மீதியை நான்கு பேருக்கும் பிரித்துக்கொடுப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி இந்த மாதமும் அவர் பணத்தைப் பிரித்துக்கொடுத்துள்ளார். தந்தை தன்னுடைய ஓய்வூதிய பணத்தைச் சகோதரிகளுக்குக் கொடுப்பது டேனியலின் மகன்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இது தொடர்பாகப் பல முறை அவரிடம் பணத்தைக் கொடுக்கக் கூடாது எனச் சண்டையிட்டுள்ளனர். ஆனால் அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பணத்தைச் சகோதரிகளுக்கு வழங்குவது பிடிக்காத டேனியலின் மகன்களான மோகன்ராய், சாமுவேல் ஆகியோர் அவரிடம் சண்டையிட்டுள்ளனர். அப்போது அவர் மகள்களுக்கு ஆதரவாகப் பேசியதால் ஆத்திரமடைந்த இருவரும் தந்தையைச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்.

`எஸ்கலேட்டரில் சிக்கிய மகன்; துரிதமாகச் செயல்பட்ட தாய்!' - அதிர்ச்சி கொடுத்த சென்னை துணிக்கடை

பலத்த காயமடைந்த டேனியல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோகன்ராய், சாமுவேல் ஆகியோர் மீது விஜயநாராயணம் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான இருவரையும் தேடிவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு