Published:Updated:

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய ரப்பர் படகு... போலீஸில் சிக்கிய போலாந்து இளைஞர் - பின்னணி என்ன?!

போலந்து நாட்டுக்காரர் வாத்திஸ்வாப்

இலங்கை அரசால் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட போலாந்து நாட்டு இளைஞர் வேதாரண்யத்தில் போலீஸில் சிக்கினார்.

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய ரப்பர் படகு... போலீஸில் சிக்கிய போலாந்து இளைஞர் - பின்னணி என்ன?!

இலங்கை அரசால் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட போலாந்து நாட்டு இளைஞர் வேதாரண்யத்தில் போலீஸில் சிக்கினார்.

Published:Updated:
போலந்து நாட்டுக்காரர் வாத்திஸ்வாப்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த முனங்காட்டு பகுதியில் நேற்று (24.07.2022)  காலை ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலின் பெயரில் வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீஸார் அந்தப் படகை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதன்பிறகு தஞ்சை சரக டி.ஜ.ஜி.கயல்விழி, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் உளவுத்துறை போலீஸார் படகை பார்வையிட்டு விசாரணை செய்தனர். நாகையிலிருந்து 'துளி' என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் படகிலிருந்து சிறிது தூரம் காட்டுக்குள் ஓடிச் சென்று நின்றுவிட்டது. பின்பு டிரோன் கேமரா மூலம் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். இரவு மீனவக் கிராம பஞ்சாயத்துப்  பிரதிநிதிகளை அழைத்து வெளிநபர்கள் வந்தால் தகவல் தெரிவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

போலந்து நாட்டுக்காரர்  வாத்திஸ்வாப்
போலந்து நாட்டுக்காரர் வாத்திஸ்வாப்

இந்த நிலையில், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர்கள்  சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் நடந்து செல்வதாக போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். உடனடியாக போலீஸார் விரைந்துவந்து அந்த நபரைக் கைதுசெய்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் வைத்து நாகை மாவட்டக் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் போலீஸார் இரவு 9 மணி முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் போலந்து நாட்டைச் சேர்ந்த வாத்திஸ்வாப் (வயது 40) என்பது தெரியவந்தது. பின்பு முதற்கட்ட விசாரணையில், வாத்திஸ்வாப் போலந்து நாட்டிலிருந்து 2019 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையைச் சுற்றிப்பார்க்க வந்தது தெரியவந்தது. அப்போது கொழும்புவில் குடிபோதையில் அடிதடி வழக்கில் சிக்கி மூன்று நாள் ஜெயிலில் இருந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்பு 2,000 டாலர் ஜாமீன் தொகை கட்டி வெளிவந்துள்ளார். ஆனால், இவர் மீதுள்ள வழக்கை முடித்துவிட்டுத்தான் நாடு திரும்ப வேண்டும் என இலங்கை அரசாங்கம் இவரது பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொருளாதார முடக்கத்தால் கொழும்பிலே சுற்றித் திரிந்துள்ளார். பின்பு சொந்த நாடு செல்வதற்கு முயற்சி செய்து சென்ற வாரம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் மூலம் வந்திறங்கியுள்ளார். `சொந்த நாட்டிற்குச் செல்ல தமிழகம் வழியாக வந்து டெல்லியிலுள்ள போலந்து நாட்டுத் தூதரகம் மூலம் சென்றுவிடலாம்' என இலங்கையில் உள்ளவர்கள் யோசனைக்கூறியிருக்கின்றனர்.

அதனால் ரூபாய் 1 லட்சம் கொடுத்து ரப்பர் படகை வாங்கி அதில் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து கோடியக்கரைக்குக் கடந்த 23-ம் தேதி அதிகாலை வந்து சேர்ந்துள்ளார். பின்பு படகை முணங்காட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து சுமார் 3 கி.மீ தூரமுள்ள ஆறுகாட்டுதுறைக்கு நடந்தே வந்து அங்குள்ள கருவைதோப்பில் படுத்துறங்கிவிட்டார்.

Police station
Police station

இரவு 9 மணியளவில் சென்னை செல்வதற்கு விசாரித்தபோதுதான் ஆறுகாட்டுதுறை மீனவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். போலீஸாரும் அவரைப் பிடித்துவிட்டனர். அவரிடமிருந்து ஒரு பேக்கை கைபற்றி சோதனையிட்டதில், அதில் சிறிய கத்தி, போன், வாட்டர் பாட்டில், கூலிங் கிளாஸ், பிஸ்கட், செல் சார்ஜர், பவர் பேங்க், டார்ச் லைட், பேட்டரி, செருப்பு உள்ளிட்ட பொருள்கள் இருந்தன. மேலும் அனைத்து பணப் பரிமாற்றமும் போன் மூலமே செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.