Published:Updated:

`துப்பாக்கிச் சூடு; பெட்ரோல் குண்டு?' - தமிழர் நீதிக் கட்சி சுப.இளவரசன் கொலை முயற்சி புகார்!

சுப.இளவரசன்

திருமண விழா நடத்தி முடித்துவிட்டு திரும்பியபோது சுப.இளவரசனின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

`துப்பாக்கிச் சூடு; பெட்ரோல் குண்டு?' - தமிழர் நீதிக் கட்சி சுப.இளவரசன் கொலை முயற்சி புகார்!

திருமண விழா நடத்தி முடித்துவிட்டு திரும்பியபோது சுப.இளவரசனின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
சுப.இளவரசன்

அரியலூர் மாவட்டம், வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப.இளவரசன். தமிழ்நாடு விடுதலைப்படை என்கிற அமைப்பை நடத்திவந்தவர். கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பிறகு, தமிழர் நீதிக் கட்சி என்கிற ஒரு கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.

அரியலூர்
அரியலூர்

இவர் தற்போது மேலக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், திருமண விழா நடத்தி முடித்துவிட்டு திரும்பியபோது சுப.இளவரசனின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுப.இளவரசன்
சுப.இளவரசன்

இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீஸாரிடம் சுப.இளவரசன் புகார் அளித்துள்ளார். அதில், ``திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு துவரங்குறிச்சி பைபாஸ் பிரிவு சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத 15 பேர் கொண்ட கும்பல் எனது கார் மீது துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எங்களது காரில் மீது வீசி தாக்கினர். ஆனால் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டோம்.

அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா
அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா

எனவே துப்பாக்கியாலும் வெடிகுண்டாலும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று இளவரசன் தனது புகார் மனு குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் டி.எஸ்.பி ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism