Published:Updated:

தஞ்சாவூர் அதிர்ச்சி: டாஸ்மாக் கடை வாசலில் இறைச்சிக் கடைக்காரர் வெட்டிக் கொலை!

கொலை செய்யப்பட்ட உதயக்குமார்
கொலை செய்யப்பட்ட உதயக்குமார்

இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில், உதயக்குமாருக்கு தொடர்பிருக்கிறது.

தஞ்சாவூர் அருகே கோழி, இறைச்சிக் கடை நடத்திவந்த வியாபாரி ஒருவரை, 6 பேர் கொண்ட மர்ம நபர்கள், டாஸ்மாக் கடை வாசலில் வைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனர். பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட உதயக்குமார்
கொலை செய்யப்பட்ட உதயக்குமார்

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டை முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர், உதயன் என்கிற உதயக்குமார் (30). இவர், அம்மாபேட்டை சந்தைப் பகுதியில் பிராய்லர் கோழி இறைச்சிக் கடை நடத்திவந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவரது கோழிகடைக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் உதயக்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், முகம் உள்ளிட்ட உடல் பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கொலைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கடை
கோழிக்கடை

இதுகுறித்து அம்மாப்பேட்டை காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``உதயக்குமாரும் அவரது நண்பர் ஒருவரும் அப்பகுதியில் தனித்தனியாக கோழி கறிக்கடை நடத்திவந்துள்ளனர். இதில், இருவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு உதயக்குமார் டாஸ்மாக் கடை முன்பு நின்றிருக்கிறார். அப்போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் 6 பேர் கொண்ட மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் உதயக்குமாருக்கு தொடர்பிருக்கிறது.

புதுக்கோட்டை: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

மேலும், டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபானம் வாங்கி, கோழிக்கடையில் வைத்துக்கொண்டு டாஸ்மாக் கடை மூடிய பிறகு, அதிக விலைக்கு விற்றுவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில், எதனால் இந்தக் கொலை நடந்தது... பழிக்குப் பழியாக நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விரைவில் பிடித்து விடுவோம்’’ என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு