Published:Updated:

`ஆள் இல்லாத வீடுகளே டார்கெட்; 2 மாதங்களில் 16 வீடுகளில் கைவரிசை' - சிறை நண்பர்கள் சிக்கியது எப்படி?

கொள்ளை, திருட்டு

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தஞ்சாவூர் மேல வஸ்தாசாவடி அருகே வாடகைக்கு வீடு எடுத்து கும்பல் ஒன்று திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டுவருவது தெரியவந்தது.

`ஆள் இல்லாத வீடுகளே டார்கெட்; 2 மாதங்களில் 16 வீடுகளில் கைவரிசை' - சிறை நண்பர்கள் சிக்கியது எப்படி?

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தஞ்சாவூர் மேல வஸ்தாசாவடி அருகே வாடகைக்கு வீடு எடுத்து கும்பல் ஒன்று திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டுவருவது தெரியவந்தது.

Published:Updated:
கொள்ளை, திருட்டு

தஞ்சாவூர் நகர்ப் பகுதி மற்றும் வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கிட்டத்தட்ட அடுத்தடுத்து 16 வீடுகளில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதால் பொதுமக்கள் பெரும் அச்சத்துக்கு ஆளானார்கள். ஆனாலும், திருட்டில் ஈடுபட்டவர்கள் பற்றி போலீஸாருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கொள்ளை
கொள்ளை

அதையடுத்து, தஞ்சாவூர் எஸ்.பி ரவளிபிரியா ஆளில்லாத வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனிப்படை போலீஸார் கொள்ளை நடந்த வீடுகளுக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தஞ்சாவூர் மேல வஸ்தாசாவடி அருகே வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி, கும்பல் ஒன்று திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டுவருவது தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்ட கொடுங்கசாமி
கைதுசெய்யப்பட்ட கொடுங்கசாமி

அதை, ஆதாரங்களின் அடிப்படையில் உறுதிசெய்த போலீஸார் கொடுங்க சாமி, சொட்டை தியாகராஜன், பூனை நாகராஜன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைதுசெய்தனர். மேலும், கொடுங்க சாமியிடமிருந்து 50 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகை
பறிமுதல் செய்யப்பட்ட நகை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தனிப்படை போலீஸ் டீம் வட்டாரத்தில் பேசினோம். ``தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கொடுங்கசாமி. இவருக்கு வயது 55. பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவதில் கைதேர்ந்தவர். இவர்மீது தமிழ்நாட்டில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அண்டை மாநிலங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

திருட்டில் ஈடுபட்ட  நாகராஜன்
திருட்டில் ஈடுபட்ட நாகராஜன்

தஞ்சாவூர் அருகே உள்ள நடுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சொட்டை தியாகராஜன். திருச்சி துவாக்குடியைச் சேர்ந்தவர் பூனை நாகராஜன். இவர்களின் கூட்டாளி மோகன். இவர்கள் நான்கு பேரும் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்தபோது நண்பர்களானவர்கள்.

இந்த நிலையில், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக தியாகராஜன், கொடுங்க சாமியை வரவழைத்துள்ளார். மேல வஸ்தாசாவடியில் கொடுங்க சாமி, முருகன் என்ற பெயரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். தியாகராஜன் ஆடு வளர்த்துவருகிறார். இவர்கள் சேர்ந்து ஆடுகளுக்கு இலை தழை வெட்டுவதுபோல் மரத்தில் ஏறி நின்று எந்தெந்த வீடுகளில் ஆள் இல்லை எனப் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவார்கள்.

போலீசஸ் கைதுசெய்துள்ள தியாகராஜன்
போலீசஸ் கைதுசெய்துள்ள தியாகராஜன்

பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகை, பணம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றுவிடுவார்கள். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் மட்டும் 16 வீடுகளில் இவர்கள், தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர். இவர்கள் நான்கு பேரும் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism