Published:Updated:

தஞ்சை பாலியல் தொழில் சர்ச்சை: சஸ்பெண்டு எஸ்.ஐ உள்பட 3 பேர் மீது குண்டாஸ்!

 பாலியல் கும்பல்
பாலியல் கும்பல்

தஞ்சை பாலியல் வழக்கில் செந்தில்குமார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

,தஞ்சாவூரில் பாலியல் வழக்கில் ஒரு பெண் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இதில் முன்னால் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேரை தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன்

தஞ்சாவூர் அருகே உள்ள மேலவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (49). இவரது இரண்டாவது மனைவி ராஜம் (47). இவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்களை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன்(65), ராமச்சந்திரன் (40) மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் ஆகியோர் உதவியாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் செங்கிப்பட்டி பகுதிக்கு காரில் வந்த சிலர் 20 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவரை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். உடல் முழுக்க காயங்களுடன் நடக்கக் கூட மூடியாத நிலையில் எந்த பெண் இருந்தார். அப்போது அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், அந்த இளம் பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

இதையடுத்து அந்த பெண், தன்னை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக செந்தில்குமார், ராஜம் உள்ளிட்டவர்கள் மீது புகார் அளித்தார். அதன் பின்னர், இதில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக தஞ்சாவூர் எஸ்.பி மகேஷ்வரன்,எஸ்.ஐ கண்ணன் தலைமையில் தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார்.

கண்ணன் தலைமையிலான போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் மெடிக்கல் காலேஜ் சாலையில் உள்ள நடராஜபுரம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த செந்தில்குமார், ராஜம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ பிரபாகரன், ராமசந்திரன்,பழனிவேல் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனர்.

பாலியல் கும்பல்
பாலியல் கும்பல்

அத்துடன் அவர்கள் பயன்படுத்திய 4 சொகுசு கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள்,4 செல்போன்கள்,ஒரு டைரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து செந்தில்குமார்,முன்னால் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட நான்கு பேரை கும்பகோணம் சிறையிலும், ராஜத்தை திருச்சியில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.தற்போது சஸ்பெண்ட செய்யப்பட்ட எஸ்.ஐ பிரபாகரன் உள்ளிட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார்.

10 சொகுசு வீடுகள், 30 இளம்பெண்கள், பாலியல் தொழில்... தஞ்சாவூர் பகீர்!

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``இந்த கும்பல் தஞ்சாவூரில் 15 வருடங்களாக பாலியல் தொழில் செய்து வந்துள்ளது. இதற்காக வட மாநிலத்திலிருந்து வீட்டு வேலைக்கு என இளம் பெண்களை அழைத்து வந்து ஆசை வார்த்தைகளையும் கூறியும், அடித்துத் துன்புறுத்தி கட்டாயப்படுத்தியும் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து சீரழித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்

பாதிக்கபட்ட இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் இந்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தோம். எஸ்.பி. மகேஸ்வரன், இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என கலெக்டர் கோவிந்தராவிற்கு பரிந்துரையின் செய்தார். அதன் பெயரில் கலெக்டர் கோவிந்தராவ், செந்தில்குமார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு