Published:Updated:

`அமாவாசை, சண்டேயில் கொள்ளை; டார்ச் லைட் வெளிச்சத்தில் மது!'- டாஸ்மாக் கொள்ளையனின் வாக்குமூலம்

டாஸ்மாக் கொள்ளையனின் கையுரை, குரங்கு குல்லா, டார்ச் லைட்
டாஸ்மாக் கொள்ளையனின் கையுரை, குரங்கு குல்லா, டார்ச் லைட்

`டாஸ்மாக் கடைகளில் அமாவாசை, சண்டே மட்டுமே கொள்ளையடிப்பேன். கொள்ளையடித்தப் பணத்தில் ஹோட்டல் கட்ட திட்டமிட்டிருந்தேன்' என்று டாஸ்மாக் கொள்ளையன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 24.2.2020-ல் 14,65,390 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்செய் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் நெல்சன், எஸ்.ஐ.அகஸ்டின் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை போலீஸார், கொள்ளையன் குபேரன் என்கிற சிவாவை (42) கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையின்போது குபேரன் திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கொள்ளையன் குபேரன்
டாஸ்மாக் கொள்ளையன் குபேரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``வேலூர் கருகம்பத்தூரைச் சேர்ந்த குபேரன் என்கிற சிவா, 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் அவர் ஹோட்டல்களில் பணியாற்றிவந்துள்ளார். சமையல் மாஸ்டரான அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 2 குழந்தைகளும் பிறந்துள்ளன. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக குபேரன் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார்.

திருவள்ளூர் தேரடி வீதியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்த குபேரன் அங்குதான் சில ஆண்டுகளாகத் தங்கியுள்ளார். அந்த வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள்களை குபேரன் வைத்துள்ளார். அந்தப்பகுதியில் உள்ள யாரிடமும் குபேரன் பேச மாட்டார். எப்போதாவது வீட்டுக்கு வந்து தங்குவார். தனியாக குடியிருந்த குபேரன், அவரின் அண்ணன் வேலூரில் வைத்துள்ள ஹோட்டலில் வேலை செய்வதுண்டு. அண்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது அதிக பாசமாக இருந்துள்ளார்.

அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை (சண்டே) ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகளில் நல்ல கலெக்‌ஷன் இருக்கும். அதனால் அன்றைய தினத்தில் கொள்ளையடிப்பேன். பல டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடித்துள்ளதால் எத்தனை இடங்களில் கொள்ளையடித்தேன் என்று தெரியவில்லை.
குபேரன்
போலீஸ் பிடியில் குபேரன்
போலீஸ் பிடியில் குபேரன்
கருணாநிதிக்கு நண்பர் மட்டுமல்ல ஆசிரியருமாகிய பேராசிரியர் க.அன்பழகன்!

நிரந்தர வேலை இல்லாததால் குபேரனுக்கு பணத் தேவை ஏற்பட்டுள்ளது. அதோடு தனிமையில் வாழ்ந்த குபேரன் மது அருந்தும் பழக்கத்துக்கும் அடிமையாகியுள்ளார். இந்தச் சமயத்தில்தான் 7 ஆண்டுகளுக்கு முன் டாஸ்மாக் கடையில் கொள்ளை என்ற செய்தியை பேப்பரில் படித்துள்ளார். அந்தக் கொள்ளைச் செய்தியில் சுவரில் துளைபோட்டு கொள்ளை நடந்ததாகத் தகவல் வெளியானது. அதைப் படித்தபோது குபேரனுக்கும் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிக்கலாம் என்ற யோசனை ஏற்பட்டுள்ளது.

அதனால் மது அருந்தச் செல்லும் டாஸ்மாக் கடைகளை நோட்டமிட்டுள்ளார். அப்போது அங்கு பணம் அதிகம் நடமாடுவதைப் பார்த்துள்ளார். அதனால் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிக்கலாம் என்று குபேரன் முடிவு செய்துள்ளார். நள்ளிரவில் குரங்கு குல்லா அணிந்தபடி, கையில் சுவரில் துளையிடத் தேவையான பொருள்களுடன் அவர் புறப்படுவார். திருவள்ளூரிலிருந்து கடைசியாக சென்னைக்குப் புறப்படும் மின்சார ரயிலில் பயணிப்பார்.

சிசிடிவி காட்சியில் சிக்கிய குபேரன்
சிசிடிவி காட்சியில் சிக்கிய குபேரன்

பஸ் மூலம் கொள்ளையடிக்க தேர்வு செய்த டாஸ்மாக் கடைக்குச் செல்வார். பின்னர், டாஸ்மாக் கடை ஊழியர்கள் கதவைப் பூட்டி விட்டு வெளியில் செல்லும்வரை காத்திருப்பார். டாஸ்மாக் கடைக்குள் செல்லும்போது தன்னுடைய முகம் சிசிடிவி கேமராவில் பதிவாகாமல் இருக்க குரங்கு குல்லாவை முகத்தில் அணிந்துகொள்வார். அந்தப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது சுவரில் துளைபோடுவார். பின்னர் அவ்வழியாக உள்ளே சென்றதும் டார்ச் லைட் வெளிச்சத்தில் கடையிலிருக்கும் மதுவை அருந்துவார்.

பின்னர் கடையில் பணம் வைத்திருக்கும் பணப்பெட்டியை கையில் வைத்திருக்கும் சம்மட்டியால் ஓங்கி அடிப்பார். அப்போது பணப்பெட்டியில் பொருத்தப்பட்டிருக்கும் அலாரம் ஒலிக்கத் தொடங்கும். அவசர அவசரமாக அதை உடைத்து பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பெட்டியை தண்ணீருக்குள் போட்டுவிடுவார். தன்னுடைய கைரேகைகள் பதிவாகமலிருக்க கைகளில் கையுரை அணிந்திருப்பார். மேலும், வெளிச்சத்துக்கு சிறிய அளவிலான டார்ச் லைட்டையும் குபேரன் பயன்படுத்துவார். ஒரு கடையில் கொள்ளையடிக்க 3 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரம் வரை அவர் செலவழிப்பார்.

மது அருந்தச் செல்லும் டாஸ்மாக் கடைகளை குபேரன் நோட்டமிட்டுள்ளார். பின்னர் நள்ளிரவில் குரங்கு குல்லா அணிந்தபடி, கையில் சுவரில் துளையிடத் தேவையான பொருள்களுடன் அவர் புறப்படுவார்.
போலீஸ்
கொள்ளையன் குபேரனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டபணம் பொருள்கள்
கொள்ளையன் குபேரனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டபணம் பொருள்கள்
`கிழிந்த சட்டை; குரங்கு குல்லா; `நோ' செல்போன்!' - `கோடீஸ்வர' டாஸ்மாக் கொள்ளையன் சிக்கிய கதை

பணத்தை எடுத்துக்கொண்டு சுவரில் போடப்பட்ட துளை வழியாகவே வெளியில் வந்துவிடுவார். பின்னர் பஸ், ரயில் மூலம் திருவள்ளூர் வீட்டுக்குச் சென்று தங்கிக்கொள்வார். கொள்ளை நடந்த செய்தியை டிவி-யிலும் செய்தித்தாள்களிலும் படித்து தெரிந்துகொள்ளும் குபேரன், பணத்தை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கொடுத்துவிடுவார். மயிலாப்பூரில் கொள்ளையடித்தப் பணத்தில் ஒரு தொகையை வேலூரில் இடம் வாங்க குபேரன் கொடுத்து வைத்திருந்தார். அந்த இடத்தில்தான் குபேரன் பெரிய அளவில் ஹோட்டல் கட்ட திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்குள் எங்களிடம் சிக்கிக்கொண்டார்" என்றார்.

போலீஸாரிடம் குபேரன் அளித்த வாக்குமூலத்தில், ``அமாவாசை, ஞாயிற்று கிழமை (சண்டே) ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகளில் நல்ல கலெக்ஷன் இருக்கும். அதனால் அன்றைய தினத்தில் கொள்ளையடிப்பேன். பல டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடித்துள்ளதால் எத்தனை இடங்களில் கொள்ளையடித்தேன் எனத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு