Published:Updated:

Dolo-650: மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்களுக்கு ரூ.1,000 கோடிக்குப் பரிசுகள், சலுகைகள் - ஐ.டி தகவல்

Dolo- 650 ( ட்விட்டர் )

கணக்கில் காட்டப்படாத ரூ.1.2 கோடி பணம், ரூ.1.4 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

Dolo-650: மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்களுக்கு ரூ.1,000 கோடிக்குப் பரிசுகள், சலுகைகள் - ஐ.டி தகவல்

கணக்கில் காட்டப்படாத ரூ.1.2 கோடி பணம், ரூ.1.4 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
Dolo- 650 ( ட்விட்டர் )

டோலோ 650, கொரோனா பேரிடர் காலத்தில் இந்த மாத்திரைக்கு பெரும் டிமாண்ட் இருந்தது. அதனால், 2020-ம் ஆண்டில் கொரோனா தொடங்கியதிலிருந்து 350 கோடி டோலோ-650 மாத்திரைகள் விற்றிருப்பதாகவும், அதன் மூலம் ஒரு வருடத்தில் ரூ.400 கோடி வருவாய் ஈட்டியதாக மைக்ரோ லேப்ஸின் தலைமை மேலாண் இயக்குநர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை
ட்விட்டர்

இந்த நிலையில், மைக்ரோலேப்ஸ் நிறுவனம் முறையான வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லி, தமிழ்நாடு, சிக்கிம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களிலுள்ள மைக்ரோலேப்ஸ் நிறுவனத்துக்குத் தொடர்புடைய 40 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மைக்ரோ லேப்ஸின் தலைமை மேலாண் இயக்குநர் திலீப் சுரானா, இயக்குநர் ஆனந்த் சுரானா ஆகியோரின் இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மருத்துவத்துறை
மருத்துவத்துறை
ட்விட்டர்

இந்தச் சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெங்களூரிலுள்ள தலைமையகத்தில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட தகவலறிக்கையில், கணக்கில் காட்டப்படாத ரூ.1.2 கோடி பணம், ரூ.1.4 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

மாத்திரைகள்
மாத்திரைகள்
ட்விட்டர்

மேலும், விளம்பரம் பிரசாரம், கருத்தரங்குகள், மருத்துவ ஆலோசனைகள் மூலம் மாத்திரையை விளம்பரப்படுத்த, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கான பயணச் செலவுகள், சலுகைகள் அவர்களுக்கான பரிசுகள், இலவசங்கள் என முறையற்ற வகையில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் செலவழித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது" என அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர்.