Published:Updated:

`டீ' குடித்தனர், காசு கொடுக்கல!'- பணம் கேட்ட மதுரை கடைக்காரரை வெட்டிக்கொன்ற வாலிபர்கள்

செ.சல்மான் பாரிஸ்

`டீ' குடித்துவிட்டு காசு கொடுக்காமல் சென்றவர்களைத் தட்டிக்கேட்ட கடைக்காரரை 5 வாலிபர்கள் சேர்ந்து வெட்டிக் கொன்ற சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

marimuthu
marimuthu

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 2- வது தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து யோகேஸ்வரன். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இன்று காலை டீக்கடைக்கு வந்த 5 வாலிபர்கள் டீ குடித்துள்ளனர். டீ குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றவர்களை மாரிமுத்து யோகேஸ்வரன் நிறுத்தி பணம் கேட்டிருக்கிறார்.

file pic
file pic

அதற்கு காசு தர முடியாது என்று தகராறு செய்துள்ளனர். பதிலுக்கு மாரிமுத்துவும் பேச திடீரென்று அந்தக் கும்பல் மாரிமுத்துவை சரமாரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடிய மாரிமுத்துவை அந்தக் கும்பல் விரட்டி வெட்டியது. அருகிலிருந்தவர்கள் மாரிமுத்துவை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பெற்றோர், கர்ப்பிணி மனைவியோடு மகனும் சுட்டுக் கொலை! - கர்நாடகாவில் தொடரும் தொழிலதிபர்கள் தற்கொலை

பரிசோதித்த மருத்துவர்கள் மாரிமுத்து உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காலையில் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் சிறிது நேரத்தில் கொல்லப்பட்டதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

murder
murder

மாரிமுத்துக்கு மனைவியும், பள்ளியில் படித்துவரும் மகனும் மகளும் உள்ளனர். கொலையில் சம்பந்தப்பட்ட 19 வயதான வீர கார்த்திக் என்ற வாலிபரை தல்லாகுளம் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திவருகிறார்கள். மற்ற கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். மதுரையில் சமீப காலமாக அற்ப காரணங்களுக்காக கொலை நடப்பதும், இதுபோன்ற கொலைகளில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுவதும் சகஜமாகி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.