Published:Updated:

தன் இரு சக்கர வாகனத்தைத் தொட்டதற்காக ஆசிரியரால் தாக்கப்பட்ட பட்டியலின மாணவன் - உ.பி-யில் அதிர்ச்சி

பட்டியலின மாணவனைத் தாக்கிய ஆசிரியர்

உத்தரபிரதேசத்தில் தன்னுடைய வாகனத்தைத் தொட்டதற்காக பட்டியலின மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தன் இரு சக்கர வாகனத்தைத் தொட்டதற்காக ஆசிரியரால் தாக்கப்பட்ட பட்டியலின மாணவன் - உ.பி-யில் அதிர்ச்சி

உத்தரபிரதேசத்தில் தன்னுடைய வாகனத்தைத் தொட்டதற்காக பட்டியலின மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பட்டியலின மாணவனைத் தாக்கிய ஆசிரியர்

உத்தரப்பிரதேசத்திலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பட்டியலின மாணவன் ஆறாம் வகுப்பு படித்துவருகிறான். அந்த மாணவன் வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்தும் வீட்டுக்கு தாமதமாக வந்திருக்கிறார். அந்த மாணவனின் தாய் அவனிடம், `ஏன் பள்ளி சீக்கிரமாக முடிந்தும் இவ்வளவு தாமதமாக வருகிறாய்?’ என விசாரித்திருக்கிறார்.

அப்போது அந்தச் சிறுவன், பள்ளியில் என்ன நடந்தது என்பதைத் தன் தாயிடம் விரிவாக கூறியிருக்கிறார். பள்ளியில் இடைவேளையின்போது ஓர் ஆசிரியரின் இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக அவர் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகத் தெரிவித்திருக்கிறார்.

பட்டியலின மாணவனைத்  தாக்கிய ஆசிரியர்
பட்டியலின மாணவனைத் தாக்கிய ஆசிரியர்

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தத் தாய், போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார். மேலும், ஆசிரியர் தன்னுடைய மகனைத் தனியாக அறையில் அடைத்துவைத்ததாக அந்தத் தாய் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதற்கிடையே குறிப்பிட்ட ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தியாவில், அதுவும் பள்ளிகளில் இது மாதிரி தொடர்ச்சியாகத் தீண்டாமை சார்ந்த கொடுமைகள் நடந்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.