Published:Updated:

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் கைது - சிக்கியது எப்படி?!

கைது செய்யப்பட்ட ஜூலியஸ் ரவிச்சந்திரன்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை நெல்லை மாவட்டத்தில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் கைது - சிக்கியது எப்படி?!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை நெல்லை மாவட்டத்தில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Published:Updated:
கைது செய்யப்பட்ட ஜூலியஸ் ரவிச்சந்திரன்

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜூலியஸ் ரவிச்சந்திரன் (54). இவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே, ஒட்டுமொத்த கிராம மக்கள் ஒன்றுதிரண்டு பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் ஆங்கில ஆசிரியர் ஜெயபால் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் நடத்திய விசாரணையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜூலியஸ் ரவிச்சந்திரன் ஏற்கனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நயினார் கோவில் காவல் நிலையத்தில் அப்பள்ளி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ஜூலியஸ் ரவிச்சந்திரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். மேலும் அதற்கு உடந்தையாக இருந்த ஆங்கில ஆசிரியர் ஜெயபால் மீது குற்றத்தை மறைக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நயினார் கோவில் காவல் நிலையம்
நயினார் கோவில் காவல் நிலையம்

இதையடுத்து ஆசிரியர்கள் இருவரும் தலைமறைவாகினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் ஆசிரியர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஜூலியஸ் ரவிச்சந்திரனின் செல்போன் சிக்னல் நெல்லை மாவட்டத்தை காட்டியுள்ளது. இதனைதொடர்ந்து நயினார் கோவில் போலீஸார் நெல்லை விரைந்தனர். அந்த செல்போன் சிக்னலை பாலோ செய்து சென்றதில் பெரியகுளம் அன்புநகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீஸார் கைது செய்து நயினார் கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தலைமறைவாக உள்ள ஜெயபாலை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜூலியஸ் ரவிச்சந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.