Published:Updated:

`திருமணமான அன்றே சுயரூபம் தெரிந்துவிட்டது..' - சென்னைக் காவலரால் விபரீத முடிவெடுத்த மனைவி

தற்கொலை செய்த ஆசிரியை பத்மபிரியா
தற்கொலை செய்த ஆசிரியை பத்மபிரியா

ராஜாராம், ஆவடியில் போலீஸ் துறையில் பணிபுரிவதாகவும் திருமணத்தின்போது விலை உயர்ந்த கார் மற்றம் 50 சவரன் நகை போடவேண்டுமென்று கேட்டார்.

சென்னை பொன்னேரி, என்சிடிபிஎஸ், வல்லூர் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவரின் மனைவி மகேஷ்வரி. இவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்துவருகிறேன். எனக்கு பத்மபிரியா (24) என்ற மகளும் திவ்யபிரகாஷ் (22) என்ற மகனும் உள்ளனர். மகள் பத்மபிரியா பி.இ படித்துள்ளார். கடந்த 26.2.2019-ல் என் மகளை மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் அவருடைய தம்பி ராஜாராம் என்பவருக்குப் பெண் கேட்டு வந்தார். ராஜாராம், ஆவடியில் போலீஸ் துறையில் பணிபுரிவதாகவும் திருமணத்தின்போது விலை உயர்ந்த கார் மற்றம் 50 சவரன் நகை போடவேண்டுமென்று கேட்டார்.

`மதுபோதையில் மனைவி, மகனை வெட்டிய தந்தை; கொலை செய்த மகன்!' -சென்னையில் நடந்த கொடூரம் #Lockdown
பத்மபிரியா, ராஜாராம்
பத்மபிரியா, ராஜாராம்

அதன்பின்பு 26.2.2020-ல் மேலூரில் உள்ள திருவுடையம்மன் கோயிலில் என் மகள் பத்மபிரியாவுக்கும் ராஜாராம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் 27.2.2020-ல் மீஞ்சூரிலுள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திருமணத்தின்போது என் மகளுக்கு விலை உயர்ந்த சொகுசுக் காருக்கு பதிலாக அதைவிடக் குறைவான விலை உள்ள காரை வாங்கிக் கொடுத்தோம். திருமணம் முடிந்த பின்பு என் மருமகனின் வீட்டிலேயே சாந்திமுகூர்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள்.

அப்போது என் மருமகனின் அண்ணன் ராஜ்கமல் அவருடைய மனைவி திவ்யா என் மகளின் மாமியார் அவருடைய குடும்பத்தினர்,` நாங்கள் கேட்ட கார், சீர்வரிசைப் பொருள்களை வாங்கித் தரவில்லை. அதனால் முதலிரவு நடக்காது' என்றார்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதலிரவு ஏற்பாடு செய்தார்கள். மறுநாள் என் மகள், என்னிடம் எனக்கு முதலிரவு நடைபெறவில்லை என்று கூறினாள். ஏன் என்று கேட்டதற்கு `வரதட்சணை கொடுக்கவில்லை என்றும் என் கணவருக்கும் இன்னொரு பெண் ஒருவருக்கும் பழக்கம் இருப்பதையும் தெரிவித்தார். பின்னர் தனியாகப் படுத்துக்கொண்டு அந்தப் பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்' என்று கூறினாள்.

காவலர் ராஜாராம்
காவலர் ராஜாராம்

அதன்பின்னர் 18.3.2020 அன்று ஆவடியில் உள்ள போலீஸ் அதிகாரியிடம் என் மகள் புகார் கொடுத்து தன் கணவருடன் வாழ வைக்கும்படி வேண்டினாள். இது சம்பந்தமாக அந்த அதிகாரி விசாரித்தார். பின்னர் என் மருமகனின் அண்ணன், ஏன் புகார் கொடுத்தீர்கள் என்று என் மகளை மிரட்டியதால் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் என் மகள் புகார் கொடுத்தாள். இரண்டு புகார்களும் நிலுவையில் உள்ளன.

பிறகு என் மகள், என் வீட்டிலிருந்தபோது என் மருமகன் விவாகரத்து கேட்டு என் மகளை மிரட்டி வந்தார். கடந்த 27.4.2020 அன்று என் மருமகன், என் மகளுக்கு காலை 10.39 மணிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். எங்களிடம் என் மகள், அம்மா என்னை தவறான இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டீர்கள் . என் கணவரால் தம்பி மற்றும் உங்கள் இருவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனச் சொல்லி அழுதாள். நான் என் மகளை ஆறுதல்படுத்தினேன். பின்னர் நானும் என் கணவரும் உடல்நலம் சரியில்லாத என் தாயாரைப் பார்ப்பதற்கு வல்லூருக்குப் போய் விட்டோம்.

ராஜாராம், பத்மபிரியா
ராஜாராம், பத்மபிரியா
`48 வயது தொழிலாளிக்கு 19 வயது மகளை திருமணம் செய்து வைத்த பெண்?!’ -தற்கொலைக்கு முயன்ற முதல் மனைவி

பின்னர் என் மகன் 27.4.2020 மாலை 4 மணிக்கு என் மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக போன் பண்ணினான். நாங்கள் உடனே திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பத்மபிரியாவைக் கொண்டு சென்றோம். அங்கு என் மகள் இறந்துவிட்டதாகக் மருத்துவர்கள் கூறினர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக என் மகள் அவளுடைய தற்கொலைக்கு யார், யார் காரணம் என்று கடிதம் ஒன்று எழுதி வைத்திருக்கிறாள். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக இருந்த என் மருமகன் ராஜாராம் அவருடைய அண்ணன் ராஜ்கமல் மற்றும் குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து என் மகளுக்குக் கொடுத்த சீர்வரிசைப் பொருள்களை மீட்டுத் தரும்படி மிக்க பணிவுடன் வேண்டுகிறேன். இவ்வாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பத்மபிரியா, ராஜாராம்
பத்மபிரியா, ராஜாராம்
கொலை செய்யும்போது `ஆன்' ஆன செல்போன்; காட்டிக்கொடுத்த ஆடியோ! - சென்னைக் கடற்கரையில் நடந்த கொடூரம்

புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்கு பதிந்துள்ளார். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் பொன்னேரி ஆர்.டி.ஓ விசாரணை நடத்திவருகிறார்.

போலீஸ் விசாரணையில் பத்மபிரியா, அந்தப்பகுதியில் ஆசிரியையாகப் பணியாற்றிவந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

திருமணமான 2 மாதத்தில் சென்னை ஆவடியில் காவலராகப் பணியாற்றி வரும் ராஜாராமின் மனைவி பத்மபிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு