Published:Updated:

`திருட்டுக்கு நடுவே ஊஞ்சலாடிய திருடன்!’ - சிசிடிவி காட்சியைப் பார்த்து `ஷாக்' ஆன ஆசிரியர்

வீட்டுக்கு வந்த திருடன் ஊஞ்சலில் ஓய்வெடுத்த சிசிடிவி வீடியோ காட்சி விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Thief
Thief

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் சுதாகர் நகரில் வசித்து வருபவர் ஆசிரியர் இளங்கோ. இவரது வீட்டிலும் அதைச் சுற்றியுள்ள வீடுகளிலும் கடந்த ஒரு வருடமாக சிறு சிறு பொருள்கள் திருடு போனதுடன், வாகனங்களில் இருக்கும் பெட்ரோலும் காணாமல் போனது. இது தொடர் கதையாக இருக்கவே திருடனைப் பொறி வைத்துப் பிடிக்க நினைத்த ஆசிரியர் இளங்கோ, தனது வீட்டைச் சுற்றி 6 இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினார். நேற்று முன்தினம் பக்கத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோல் திருடப்பட்டதைக் கேள்விப்பட்ட ஆசிரியர் இளங்கோ, தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிர்ச்சியடைந்தார்.

Thief
Thief

முதலில் தரைத்தளத்துக்கு வந்த திருடன் அங்கிருந்த இரு சக்கர வாகனத்தில் நீண்ட நேரம் எதையோ கழற்றுவதற்கு முயற்சி செய்கிறார். அதன்பின் மொட்டை மாடிக்கு வந்த அவர் தனது ஸ்மார்ட் போனில் இருக்கும் டார்ச் லைட்டை ஆன் செய்து அங்கும் எதையோ தேடுகிறார். பின்னர், அங்கு தொங்கவிடப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டே ஹாயாக அமர்ந்து ஓய்வெடுக்கிறார்.

` வீட்டில் நடமாடிய இடத்தில் எல்லாம் மிளகாய்ப் பொடி!' - வடிவேலு பாணியில் சிக்கிய திருடன்

எந்தவித பதற்றமும் இல்லாமல் அவர் ஊஞ்சலில் அமர்ந்திருந்ததைப் பார்த்த ஆசிரியர் இளங்கோ ’ஷாக்’ ஆனதோடு, காவல்துறைக்கும் உடனே தகவல் அளித்தார். அதனடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து திருடனைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.