Published:Updated:

`மோமோஸ்' தட்டு கீழே விழுந்ததால் வாக்குவாதம்... குடிபோதையில் 40 வயது நபரைக் குத்திக் கொன்ற இளைஞர்!

மோமோஸ்

டெல்லியில் மோமோஸ் தட்டு கீழே விழுந்ததால் 40 வயது நபர் ஒருவர் 18 வயது இளைஞரால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`மோமோஸ்' தட்டு கீழே விழுந்ததால் வாக்குவாதம்... குடிபோதையில் 40 வயது நபரைக் குத்திக் கொன்ற இளைஞர்!

டெல்லியில் மோமோஸ் தட்டு கீழே விழுந்ததால் 40 வயது நபர் ஒருவர் 18 வயது இளைஞரால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மோமோஸ்

டெல்லியில், இரவு நேரத்தில் ஜிதேந்தர் மெஹ்தோ (40) என்பவர் கடை ஒன்றில் ‘மோமோஸ்’ சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது (18 வயது) இளைஞர் ஒருவர் அந்த வழியாக நடந்து வந்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர் எதிர்பாராதவிதமாக மோமோஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜிதேந்தர் மெஹ்தோ மீது மோதியதாகத் தெரிகிறது. அந்த இளைஞர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை
கொலை

இதையடுத்து ஜிதேந்தர் சற்றுத் தடுமாறியதில் அவர் கையில் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மோமோஸ் கீழே விழுந்துவிட்டது. இந்த நிலையில், ஜிதேந்தருக்கும், அந்த இளைஞருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இளைஞர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஜிதேந்தரை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள், ``இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் (கொலை) கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் போலீஸ் கத்தியைக் கைப்பற்றியுள்ளது'' என்றார்கள்.