Published:Updated:

திரிபுரா: தாய் உட்பட 4 பேரை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவன் கைது - அதிர்ச்சி சம்பவம்

வெட்டிக்கொலை

திரிபுராவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கோடரியால் வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திரிபுரா: தாய் உட்பட 4 பேரை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவன் கைது - அதிர்ச்சி சம்பவம்

திரிபுராவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கோடரியால் வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
வெட்டிக்கொலை

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தன் தாத்தா, தாய், சகோதரி மற்றும் அத்தை ஆகியோர் சனிக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது கோடரியால் வெட்டிக் கொலைசெய்திருக்கிறான். ஞாயிற்றுக்கிழமை காலை சிறுவனின் தந்தை வந்து பார்த்தபோது, வீடு முழுவதும் ரத்தம் சிந்திக் கிடந்திருக்கிறது. மேலும், வீட்டின் கிணற்றில் சடலங்கள் மிதந்திருக்கின்றன.

கொலை
கொலை

அவர் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை அருகிலுள்ள சந்தையிலிருந்து கைதுசெய்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பு,"சிறுவன்தான் கொலை செய்தான் என்பது உறுதியாகியிருக்கிறது. குற்றத்தின் நோக்கத்தைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது.

police
police

முதல்கட்ட விசாரணையில், சிறுவன் டிவி பார்ப்பதற்கு அடிமையாகியிருக்கிறார். மேலும், கொலை போன்ற வன்முறை காட்சிகளை கூர்ந்து ரசிப்பார் என்பதும் தெரியவந்திருக்கிறது. விசாரணையில் மேலதிக தகவல்கள் கிடைக்கும்" எனத் தெரிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.